Featured Posts

Sports

Games

Monday, 15 July 2019

School Morning Prayer Activities - 16th July 2019

No comments :

School Morning Prayer Activities - 16th July 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 16th July 2019

திருக்குறள்

அதிகாரம்:புகழ்

திருக்குறள்:239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வளமான பயனாகிய விளைச்சல் இல்லாமல் குன்றிவிடும்.

பழமொழி

It takes two to make quarrel

இரு கை தட்டினால் தான் ஓசை.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.

2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.

பொன்மொழி

நாம் செய்த நன்மைகளுக்கு பிரதி பலன் வேண்டிக் காத்திருப்பது, பிறர் பொருட்களை அபகரித்தலுக்கு சமம்....

----- விவேகானந்தர்

 பொது அறிவு

1. உலகிலேயே முதன்முதலாக பிரதமரான பெண் யார்?

சிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை)

2. ஒரே ஒரு பைசாவிற்கு விற்கப்பட்ட முதல் இந்திய பத்திரிக்கை எது?

சுலப சமாசார் (1870 வங்க மொழி)

English words & meanings

* Bat - have both of animal and bird. வெளவால்.
இன்றைய ரேடார் கண்டு பிடிக்க காரணமாக இருந்தது.

* Bamboo - a tall plant, மூங்கில்.
சுற்று சூழலை பாதுகாக்க சிறந்த தாவரம். மிக வேகமாக வளரக் கூடியது.

ஆரோக்ய வாழ்வு

மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும் பாேது  உடல் வெப்பம் அதிகரிப்பதால்     நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Some important  abbreviations for students

* ICAS - Indian Civil Accounts Service

* ICLS - Indian Corporate Law Service

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

செவ்வாய்

English & Art

Think & write

1. The sun is much _ _ _ _ _ _ than the moon. (6 letters)

 nearer
 faster
 bigger

2. Hurry up, or we’ll _ _ _ _ our train! (4 letters)

 miss
 lose
 take

3. She’s getting home the day _ _ _ _ _ tomorrow. (5 letters)

 after
 since
 before

4. My doctor said I have to _ _ _ _ up smoking cigarettes. (4 letters)

 take
 give
 quit

5. They’ve been playing for thirty minutes so _ _ _ . (3 letters)

 bad
 far
 now

கலையும் கைவண்ணமும் - 30

இன்றைய செய்திகள்

16.07.2019

* சந்திரயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

* ரூபாய் நோட்டுகளை, பார்வையற்றோர் எளிதாக அடையாளம் காணும் வகையில், 'மொபைல் ஆப்' எனப்படும் செயலியை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, சுப்ரீம் கோர்ட்டில் அக்டோபர் 31 வரை மேலும் அவகாசம் கேட்டுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை வென்று பட்டத்தை கைப்பற்றினார்.

* செக் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Today's Headlines

🌸 ISRO has announced that the "chandrayan 2"launching date has been postponed due to a technical problem.

 🌸 Reserve Bank of India has decided to introduce a mobile app to facilitate easy  identification of banknotes for visually challenged person

 🌸The Tamil Nadu Elections Commission has asked the Supreme Court for more time till October 31 to conduct local elections.

 🌸In the men's singles final of the Wimbledon Grand Slam, current champion Novak Djokovic (Serbia) defeated Swiz star Roger Federer.

 🌸Hima Das holds the gold medal in the women's 200m race of the Czech International Athletic Championships.

Prepared by

Covai women ICT_போதிமரம்

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

No comments :
காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

நாமும் தெரிந்துகொள்வோம்1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.

81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.


111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.

Tuesday, 26 March 2019

TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

No comments :

TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுஆசிரியர் தகுதித் தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு(தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு புதிதாக போட்டித்தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக்தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்தது.

முன்பு ஒவ்வொரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், காகித வழியில் பெறப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:

கணினி ஆசிரியர் தேர்வைத்தொடர்ந்துஅனைத்து தேர்வுகளையும் ஆன்லைன்வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. எனினும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் "ஓஎம்ஆர் ஷீட்" முறையிலேயே வழக்கம்போல் நடத்தப்படும்.காரணம் ‘டெட்’ எனப்படும் தகுதித்தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற நிலையில், இத்தேர்வை ஆன்லைன்வழியில் நடத்துவது சிரமமாக இருக்கும். பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்தஎண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.எனவே, இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,‘டெட்’ தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’ முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால்தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றனர்.

10th Public Exam 2019 Maths - Mistake in 31st Question!

No comments :

10th Public Exam 2019 Maths - Mistake in 31st Question!

இன்று நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - கணிதத் தேர்வு 5 மதிப்பெண் வினாவில் 31-வது கேள்வியில் பிழை உள்ளது.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணிதத் தேர்வு: தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு

No comments :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணிதத் தேர்வு: தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்துக்கான வினாத் தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.இதன் காரணமாக கணிதப் பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முக்கிய பாடமான கணிதத்தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.கணித வினாத்தாள் குறித்து மாணவ, மாணவிகள் கூறியது: கணித வினாத்தாளைப் பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. காலாண்டு,  அரையாண்டுத் தேர்வுகள் மட்டுமல்ல, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் இந்தத் தேர்வில் இடம்பெற்றிருந்தன.  ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வினாக்கள் மிகவும் கடினம். ஏனைய வினாக்கள் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. 2 மதிப்பெண், 5 மதிப்பெண், 10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலானவினாக்கள் முற்றிலும் புதிதாக இருந்தன. கணிதம்,  அறிவியல்,  சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடங்களில் கணிதத்தில்தான் 100-க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும்.  ஆனால் இந்த வினாத்தாளில் 75-க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என்றனர்.மனரீதியாக பாதிக்கும்... இது குறித்து அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறியது:  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் கலக்கமடையசெய்துவிட்டது.முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது. பொதுவாக 50 சதவீதம் எளிமையாகவும், 30 சதவீதம் சராசரியாகவும், 20 சதவீதம் கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால்வினா தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி பெற 5 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள கேள்விகள் பெரிதும் உதவும். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள 9 வினாக்களில் ஒரே ஒரு வினாவுக்கு மட்டுமே சராசரி மாணவர்களால் பதிலளிக்க முடியும்.  மற்ற வினாக்களை கடினம்,  மிகக் கடினம் என வகைப்படுத்தலாம். மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். இதன் மூலம் கணிதத் தேர்வில் சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவதோடு,  அந்தப் பாடத்தின் தேர்ச்சி சதவீதமும் பாதிக்கும்.

நீட் தேர்வை கருத்தில் கொண்டு...:

நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை கருத்தில் கொண்டே இதுபோன்ற வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களில் 90, 95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும்போது, கடினமாக உழைத்த  கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்குதான் தெரியும். ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம்.  கடினமான வினாகளைக் காட்டிலும்,  சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வினாக்களே மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதை தேர்வுத்துறை புரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

Monday, 25 March 2019

School Morning Prayer Activities - 26th March 2019

No comments :

School Morning Prayer Activities - 26th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 26th March 2019

திருக்குறள்:158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

உரை:

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

பழமொழி :

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  - ஜெபர்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?

புதுக்கோட்டை

2.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?

சிவகாசி

நீதிக்கதை :

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

இன்றைய செய்தி துளிகள்:

1. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார்

2. ஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் - வருமானவரித்துறை அறிவிப்பு.

3. இஸ்ரோ கல்வி நிறுவனம் 'அட்மிஷன்' அறிவிப்பு

4. எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி

5. அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், எளிதான வெற்றியுடன் மியாமி ஓபன் டென்னிஸ் 4ம்  சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

தபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்?

No comments :

தபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்?

ஆசிரியர்களுக்கு வணக்கம்

✍செ.பால்ராஜ்

*போன சட்டமன்ற தேர்தலில் 24000 தபால்  ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள்.

காரணம்:
*01📌 வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்*
*இரண்டு டிக் செய்தீர்கள் என்று சொன்னார்கள்*.


*02 📌Attestation BT teacher,Middle HM இடம் வாங்கியது செல்லாது என சொன்னார்கள்*.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தபால் வாக்கு சம்மந்தமாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆகையால்
இந்த முறை *சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான*

*🎯உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்*

*🎯மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்*

*🎯வட்டார கல்வி அலுவலர் BEO*

அவர்களிடம் இருந்து பெற்று நமது கடமையை சரியாக செய்வோம்.

தோழமையுடன்....
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ
*நெல்லை

தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்!

No comments :

தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்!

தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் சார்பாக கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இன்றைய கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது. முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது.

பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே . மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள் . ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள். மற்ற பாடங்களில் 90,95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்கு தான் தெரியும். இனியாவது தேர்வுத்துறை திருந்துமா?

க(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்!

No comments :

க(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்!

10 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கான கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாள் தயாரித்த உயர்ந்த மனிதர்கள் கவனத்திற்கு ...

தமிழகக் கல்வி முறையில் ஏற்கனவே பல குளறுபடிகள் ...

இது 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் காலம் , பல்வேறு ஏற்றத் தாழ்வுகளடங்கிய கல்வி முறையில் இன்றைய குழந்தைகள் கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாளை கையில் வாங்கிய உடனே பதறிப் போய் முகம் வெளிறியதைக் காண முடிந்தது.

100 மதிப்பெண் வாங்குவதைத்தான் தடுக்கும் டிவிஸ்டுகள் வழக்கமாக வைத்திருப்பார்கள் , தேர்வுத்துறை வினாத்தாள் தயாரிப்பில் ....

ஆனால் இன்றோ குழந்தை 35 வாங்குவதற்கும் டிவிஸ்ட் ..

தலைமையாசிரியர்கள் கூட்டம் போடும் பள்ளிக்கல்வித் துறை  அதிகாரிகள் ரிசல்ட் குறித்து நிறைய  எதிர்பார்ப்பதும் அதே கட்டளைகளை ஆசிரியர்களிடம் கடத்தும் தலைமை ஆசிரியர்களும் செய்தியாக , பீதியை கிளப்பி விடும் சூழலாக மாறுவதை அறிய மாட்டார்கள்.

குழந்தைகளிடம் இந்த அழுத்தத்தைக் கடத்த முடியாமல் தங்கள் மனதளவில் அழுத்தம் பெற்று இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. ஏற்கனவே காலம் காலமாக கணக்குப் பாடத்தை வேப்பங்காயாகப்  பார்க்கும்  மனநிலையே அடையாள ப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தில் இன்றைய கணக்குத் தேர்வு அடுத்து வரும் காலங்களில் கணிதப் பிரிவு பாடத்தைத் தேர்வு செய்யும் குழந்தைகளது எண்ணிக்கை வெகுவாகக் குறைய வழி செய்துள்ளது.

அப்படி என்ன நல்ல Educational System தந்துட்டீங்க குழந்தைகளுக்கு? 9 ஆம் வகுப்பு வரை முப்பருவக் கல்வியில் பாதி படித்தும் படிக்காமையும்  வரும் குழந்தைகள் , சரி வழக்கம் போல் ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகவேக் கூறினாலும் , ஏதோ ஒரு வகையில் அடிப்படை தெரியாமல் வந்த 10ஆம் வகுப்புக் குழந்தைகளை 35 மதிப்பெண் வாங்க வைக்கவே பிரசவ வேதனையை வருடம் முழுக்க அனுபவிக்கும் ஆசிரியர்கள் பாடாய்ப் பட ,

எல்லா கேள்விகளிலும் டிவிஸ்ட் , ஒரு மதிப்பெண் வினாக்களில்  கடினம் ,2 மதிப்பெண் கேள்விக்கான கணக்குகளிலும் கடினம் , 5 மதிப்பெண் பகுதி என எல்லாவற்றிலும் தன் அறிவு மேடை புத்திசாலிக் குழந்தைகளை மட்டும் மனதில் வைத்து கேள்வித் தாள் எடுக்கப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது.

அப்போ , பின்தங்கிய மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கக் கூடாதா ???

ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு ?
கணக்கு ஆசிரியர்களே மருகிப் போகின்றனர் , ஏன் எங்கள் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றீர் ?

எங்களிடம் படிக்கும் குழந்தைகள் யார் தெரியுமா ? கேள்வியே எதிர்காலத்தில் கேட் கக் கூடாது என்று திட்டமிட்டு , அவர்களது கற்றல் சிறகுகளை ஒடித்து , வெறும் 35க்கும் தயார் செய்யும் குரலற்ற குழந்தைகள். ஏன் படிக்கல ? என்ன படிக்கற ? எந்தக் கணக்குப் புரியல , வா ... நான் உனக்கு சொல்லித் தரேன் என சொல்ல ஆளில்லாத வீடுகளில் வளரும் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்.

அவர்களது நம்பிக்கைச் சிறகுகளையும்  பிய்த்துப்  போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது ... இதுவும் ஒரு வன் கொடுமை தான்.

மனம் வெதும்புகிறது

ஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் - வருமானவரித்துறை அறிவிப்பு

No comments :

ஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் - வருமானவரித்துறை அறிவிப்புபான் கார்டுடன் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

வரி செலுத்துபவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பான் கார்டு நம்பர், ஆதார் எண் இணைப்பை உடனடியாக செய்ய வேண்டும் என வருமான வரித் துறை கூறியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழ்நிலை உருவாகும்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதிலிருந்து அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா உள்ளிட்ட மாநிலத்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்கள், 80 வயதுக்கும் மேற்பட்ட முத்த குடிமக்கள், இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பான் எண் ஆதார் எண் இணைப்பு

மத்திய நேரடி வரி வாரியம் கடந்த ஆண்டு ஜூன் 30 வரை மதிப்பீட்டாளர்கள் தங்கள் PAN கார்டுகளை ஆதாருடன் இணைக்க அனுமதி அளித்திருந்தது. இப்போது அது இந்த வருடத்தின் நிதி ஆண்டு முடிவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2) கீழ், 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று பான் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் பெற தகுதியுடையவர், எனவே தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது முறையாகும்.

வருமான வரித்துறை டிவிட்டரில் அறிவிப்பு

வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு எஸ்எம்எஸ் வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம்.

UIDPAN<12 digit Aadhaar><10 digit PAN>
  

ஆதாருடன் இணைப்பது எப்படி

பான் காடுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். வருமான வரித் துறையின் incometaxindia.gov.in இணையதளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து ‘Link Aadhaar' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்து captcha என அழைக்கப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்ட்ஐ பதிவு செய்து ‘sumbit'என்பதை கிளிக் செய்யும் போது இணைப்பு முழுமை அடையும்.

தகவல்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம்

ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இன்சியல் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும். உடனடியாக திருத்தி மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்து விடுவது அவசியமானது.
  
இணைத்து விட்டீர்களா?

நீங்கள் உங்கள் பான் கார்ட் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் வந்தால் அதனை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். incometaxindiaefiling.gov.in இணையத்தளத்திற்கு சென்று, 'ஆதார் இணைக்கவும்' என்பதை கிளிக் செய்யவும். அந்த பக்கத்தின் மேலே, 'இங்கே கிளிக் செய்யவும்' என்று ஒரு ஆப்ஷன் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் தோன்றும். அதை கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் நம்பர் விவரங்களை பதிவிடுங்கள். உங்கள் பான் கார்டு எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று அப்போதே தெரிந்துவிடும்.

TET 2019 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் - தேர்வர்கள் வேண்டுகோள்!

No comments :

TET 2019 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் - தேர்வர்கள் வேண்டுகோள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஆன் லைன் விண்ணப்பத்தில் தகவல்களை சரி பார்த்து சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லாததால் விண்ணப்பதாரர்கள் தவறுகளுடன் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.,28 ல் அறிவித்தது.

அதற்கான விண்ணப்பங்களை 'ஆன் லைன்' மூலம் http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியது. நான்கு ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ள இத்தேர்விற்கு பலரும் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வழக்கமாக இது போன்ற ஆன் லைன் விண்ணப்பங்களில் முழுமையாக விண்ணப்பித்த பின், அதை சரிபார்த்து திருத்தம் செய்யும் வகையில் விண்ணப்பம் இருக்கும். ஆனால் தகுதித் தேர்வில் விண்ணப்பித்த பின் அதை சரி பார்க்காமல் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

பலரும் தனியார் கணினி மையங்களில்தான் விண்ணப்பிக்கின்றனர். அந்த மைய ஊழியர் செய்யும் தவறு விண்ணப்பதாரரை பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விண்ணப்பத்தின் கடைசி விதியாக, இவ்விண்ணப்பத்தில் உண்மையான, சரியான, முழுமையான தகவல்களை தருகிறேன். விபரங்கள் தவறானது என தெரிந்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்பதை அறிவேன்' என விண்ணப்பதாரர் உறுதியளிக்கின்றனர். இதனால் விண்ணப்பித்தை சரிபார்த்து சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்படுத்த ஆசிரியர்கள் கோரியுள்ளனர். கடைசி நாள் 5.4.2019 என்பதால் இது வரை தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Sunday, 24 March 2019

School Morning Prayer Activities - 25th March 2019

No comments :

School Morning Prayer Activities - 25th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 25th March 2019

திருக்குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

உரை:

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

பழமொழி :

Bend the twig, bend the tree

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

பொன்மொழி:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

-அடால்ஃப் ஹிட்லர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?

காரைக்குடி

2.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?

வேலூர்

நீதிக்கதை :

நன்றி மறந்த சிங்கம்முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.

"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

இன்றைய செய்தி துளிகள்:

1.மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள்: மாநிலம் முழுவதும் 11 மையங்களில் இன்று முதல் தொடங்குகிறது.

2.தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள்மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை

3.அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்

4.ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு

5.ஐபிஎல் டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

Friday, 22 March 2019

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை வாய்ப்பு

No comments :

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை வாய்ப்பு

மின் வாரியத்தில், 'கேங்மேன்' வேலையில் சேர விரும்புவோர், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிக்கு, கேங்மேன் என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மின் வாரியம், 7ம் தேதி வெளியிட்டது.  இதற்கு, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எழுத்து, நேர்முகத் தேர்வு வாயிலாக, ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, வாரிய இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  

இந்நிலையில், தேர்தல் சமயத்தில், ஆட்கள் தேர்வு செய்யும் பணியை நிறுத்தி வைக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம், மின் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின், பொதுச் செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின், பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனம், பதவி உயர்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது. மின் வாரியம், கேங்மேன் என்ற, 5,000 புதிய பணியிடங்களை உருவாக்கி, அதை நிரப்ப, வேகம் காட்டுகிறது.  

லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்க உள்ள நிலையில், தேர்வுக்கு, மார்ச், 22ல் துவங்கி, ஏப்ரல், 24 வரை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு, பயன் அளிப்பதாக இருக்கும். இதனால், தேர்தல் முடியும் வரை, கேங்மேன் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைக்குமாறு, தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடத்தை விதி அமலுக்கு வரும் முன், கேங்மேன் பதவிக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. விண்ணப்பம் வாங்குவதை நிறுத்தி வைக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் இருந்து உத்தரவும் வராததால், நாளை முதல், திட்டமிட்டபடி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்தல் 2019 - முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த கால அட்டவணை வெளியீடு!

No comments :

தேர்தல் 2019 - முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த கால அட்டவணை வெளியீடு!

பயிற்சி நேரம்

1st Batch : காலை : 10.00 முதல் 01.00 வரை

2nd Batch : மதியம் 2.00 முதல் 5.00 வரை


இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது என்ன..? பெற்றோர்களின் கவனத்திற்கு..!

No comments :

இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது என்ன..? பெற்றோர்களின் கவனத்திற்கு..!

பெற்றோர்களின் கவனத்திற்கு..!

இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது என்ன..?

Mobile,TV என்று வெட்டியாகப் பொழுதைப் போக்காமல் கீழ்க்கண்ட செயல்களை முயற்சிக்கலாம்,அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும் படி...

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.

வங்கியில் உள்ள அனைத்து சலான்களையும் நிரப்புவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுங்கள்.

 A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக் கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்துச் சென்று,
அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்..? என்பதை அருகிலிருந்து எடுத்துக் கூறுங்கள்..,

அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவேப் புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்குக் கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்கச் சொல்லுங்கள்.

மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள்,

அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.
(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டு வாருங்கள்,

விபத்தினால் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவரை காணச் செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துக் கொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று, நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழி வகை செய்யுங்கள்,

நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக அவர்கள், பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
8 ) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள்,

அவர்கள் எந்தத் துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்னப் பொறி தட்டி விடுங்கள்,

அதன் பின் அவர்களாகளே எந்தத் துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்து விடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளைக் கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள்...

அவர்களுக்காக சிறு விளையாட்டுப் பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களையும் செய்யச் சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெற முடியும் என்பதையும் உணர்த்துங்கள்.

11)இறை தியானம் என்றால் என்ன,என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்

12) வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற லிஸ்ட்டை அவர்களையே எழுதச் சொல்லி, பணத்தையும் கொடுத்துக் கூடவே அழைத்துச் செல்லுங்கள்.

அவர்களாகவே கணக்குப் பார்த்து  வாங்கிய பொருளுக்கு சரியான பணத்தை கொடுக்கச் சொல்லுங்கள்.

பணத்தின் அருமையும், சிக்கனமும், சேமிப்பும் புரியும்.

இப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து கொள்வார்கள்.

இதுவே இப்பதிவின் வெற்றி.

1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

No comments :

1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 12616 கிரமா நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேர்தல் பணிகளில் அதிக அளவில் நிர்வாக அலுவலர்கள் அதிக அளவில் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி ஓய்வு பெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இவர்களுக்கு தொகுப்பூதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டோ அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும் வரை வரை தற்காலிக விஏஓக்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு நிமிட நேரம்

No comments :

'நீட்' தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு நிமிட நேரம்தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'நீட்' குறித்து சென்னை ஸ்மார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனர் கே.கே.ஆனந்த் பேசியதாவது:

இத்தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம்.இத்தேர்வில் பயாலஜி - 90, வேதியியல் -45, இயற்பியல் -45 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு ஒரு நிமிடத்தில் விடையளிக்கும் வகையில் நேரம் ஒதுக்கப்படும்.

இந்தாண்டு 60 வினாக்கள் வரை எளிதாக கேட்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 240 மதிப்பெண் குறைந்தபட்சமாக பெற்று விடலாம்.  இந்தாண்டு 425 மதிப்பெண் பெற்றால் அரசு ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது, 300 மதிப்பெண் வரை பெற்றால் தனியார் கல்லுாரிகளில் கிடைக்கும், பயாலஜியில் ஹூமன் பிசியாலஜி, ஜெனிட்டிக்ஸ், சுற்றுச்சூழல், பிளான்ட் பிசியாலஜி போன்ற பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும்.

இதுபோல் வேதியியல், இயற்பியலிலும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்து முழுமையாக படிக்க வேண்டும். படிப்பதை எழுதிப் பார்க்க வேண்டும். அதிகமாக மாதிரி தேர்வு எழுதி பழகிக்கொள்ள வேண்டும். ஆடை தேர்வு உட்பட நீட் தேர்வுக்கு செல்லும் போது விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதால் தெரியாத வினாக்களை எழுத வேண்டாம். 

எளிமையாக கல்வி கடன் பெற'கல்விக் கடன்' குறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வணங்காமுடி பேசியதாவது:

வங்கி கடன் குறித்த அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டால் கடன் பெறுவதில் கஷ்டம் இருக்காது. உரிய நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் பெறலாம். அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லுாரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். தற்போது வித்யாலட்சுமி போர்ட்டலில் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.  அதில் ஆதார், பான் எண், கல்லுாரி சான்று, வருமான சான்று, ஜாதி சான்று உட்பட தேவைப்படும் அனைத்து ஆவணங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும்.

நீட் தேர்ச்சி பெற்று அரசு ஒதுக்கீட்டிற்கு ஆண்டிற்கு 4 லட்சம் ரூபாயும், தனியார் கல்லுாரி ஒதுக்கீட்டிற்கு 12 லட்சம் ரூபாயும் கடன் பெறலாம். முன்கூட்டியே வங்கிக்கு சென்று பெற்றோர்- மாணவர் பெயரில் ஜாயின்ட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

திட்டமிடுதல், தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தல், சரியான வங்கிகளை உரிய அதிகாரிகளை அணுகுதல் ஆகியவற்றால் எளிதில் வங்கிக் கடன் பெறலாம்.வெளிநாட்டில் படிக்கும் டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பிற்கும் வங்கி கடன் வசதி உண்டு.

உள்நாட்டில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய், வெளி நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். உள்நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற படிப்புகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கூட கடன் பெறலாம். பெற்ற கடனை திருப்பி செலுத்துவது மிக முக்கியம்.

பரிசு பெற்ற மாணவர்கள்காலை கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை மாணவி இலக்கியா டேப்லெட் பரிசு பெற்றார். மாணவர்கள் அகமது அலி, பாலசந்தர், சண்முகபிரியன், காவியா, ஜோயிலின் மரியா வாட்ச் பரிசு பெற்றனர்.

வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

No comments :

வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10 அறிவித்தது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு சில முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

1. மக்களவை, பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

2. ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதி அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அந்த வாக்காளர் பெயர் குறிப்பிட்ட வாக்குசாவடி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

3. புகைப்பட வாக்காளர் சீட்டை மட்டுமே இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில்லை என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

4. ஆதார், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்கு புத்தகம், பான் கார்டு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர்கள் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

11 ஆவணங்களின் விவரம்

1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய/மாநில/ அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை
4. வங்கி/தபால் அலுவலகம் அளித்த புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
5. பான் கார்டு
6. தேசிய மக்கள்தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்கார்டு
7. MNREGA என்னும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறிதியளிப்புச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை
8. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட்கார்டு
9. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி-க்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை
11. ஆதார் அட்டை