Thursday, 28 February 2019

School Morning Prayer Activities - 1st March 2019

No comments :

School Morning Prayer Activities - 1st March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 1st March 2019

திருக்குறள் : 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

உரை:

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

பழமொழி:

Learn ever from an enemy

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

பொன்மொழி:

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

- டிரெட்ஸி

இரண்டொழுக்க பண்பாடு :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2)ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொது அறிவு :

1) மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?

சிங்கம்

2( மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?

நீலம்.

நீதிக்கதை : சொர்க்கத்தீவு

சொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று
பலருக்கும் ஆசை...

ஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...

தீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன்,  சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது  புறப்பட்டது...

பயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..!

இனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது...

நாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும்  அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...
யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது.  களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக  கவ்விக்கொண்டது.
கடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...

மறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...

ஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்! கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..!

கேக்கும்திறன் குறைந்துவிட்ட  அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை.  அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...

உயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...

எதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள். அதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...

படகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது.  கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது!

படகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.

அவர்கள், இவர்களை  தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்.. இயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின்  அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...

கடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும்  அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...

இறுதியாக அவர்களையும்  உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல்  பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...

இன்றைய செய்தி துளிகள் : 

1) அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

2) 15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

3) TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

4) பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை : வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்

5) இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

TNTET 2019 - Exam Date, Application Form, Eligibility, Syllabus Pattern, Study Materials, Hall Ticket, Question Paper, Answer Keys, Results, cutoff Marks Download

No comments :

TNTET 2019 - Exam Date, Application Form, Eligibility, Syllabus Pattern, Study Materials, Hall Ticket, Question Paper, Answer Keys, Results, cutoff Marks Downloadடெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு!

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது.
Date of Notification : 28.02.2019

Commencement of submission of online Application :15.03.2019

Last date for submission of online Application : 05.04.2019

Date of Written Examination – Paper I : Will be announced later

Date of Written Examination – Paper II : Will be announced later

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION

Dated: 28-02-2019

Chairman


தேர்வெழுதும் கண்மணிகளுக்கு நல்வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்

No comments :

தேர்வெழுதும் கண்மணிகளுக்கு நல்வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்


பள்ளிப்பூக்களே

உங்கள் மலர்ச்சியின் ரகசியமெழுதும் நன்நாள் நாளை
கிடைக்கட்டும் உங்களுக்கு வெற்றி மாலை

சிறகு விரித்த பறவைகளே நீங்கள் வானம் அளந்த கதையை அழகாக எடுத்தியம்ப போகிற பொன்நாள் நாளைய தேர்வுநாள்
உங்கள் அத்துணை விடைகளின் உருவிலும்  உமது ஆசிரியர் இருப்பர் பின்னால்

கற்கண்டோ கற்பாறையோ உங்கள் மனது எப்படி வார்த்திருக்கிறதோ இத்தேர்வை??
ஒருபோதும் அடைந்திடாதீர் மனச்சோர்வை..

கற்கண்டெனில் இனிமையாய் ருசித்து உண்க
கற்பாறை எனில் அறிவுளியால் அழகிய சிற்பம் செய்க

பதட்டமோ பயமோ யாவையும் புறந்தள்ளு
இதொன்றும் போரல்ல...
அழகிய தேர்வு
அதை வெல்ல அறிவாயுதமே போதும்

ஒவ்வொரு நொடியும் உனக்கு பொன்னினும் மேலானது
கவனத்துடன் கையாள்க
படித்த அத்தனையும் பாங்குற நினைவு கூர்க

உடல்நல கவனமெடு
தொலைக்காட்சி தவிர்
வெற்று அரட்டைகளை விலக்கு
சந்தேகமேதுமிருப்பின் தயங்காது ஆசானைக் கேட்டறி
வெற்றி ஒன்றே இந்த நேரத்தில் உனது குறி

எனக்கு தெரிந்து நீயே எதிர்கால இந்தியா
கபடமற்ற நல்லுள்ளமே
கவனமுடன் தேர்வெழுது
உன் அறிவை நன்குழுது

வெற்றியோ தோல்வியோ ஏதோ ஒன்று உனக்குண்டு..
வெற்றியை மட்டுமே பெற மகிழ்வோடு நீ போராடு

தேர்வென்பது முந்நூறு நாளின் உழைப்பினை இரண்டரை மணி நேரத்தில் வெளியிடுவது..
வளவளவென விவரிப்பதில் சலிப்புதானே மிஞ்சும்
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தால் நீதான் பத்தரைமாத்து தங்கம்

உன் முன் வரப்போவது கொடும்புலியோ கோவச்சிங்கமோ அல்ல...
வினாத்தாள் மட்டுமே
விடையெழுது பயமின்றி
பதட்டம் சிறிதுமின்றி

வெல்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு
நீயும் சூடுக வெற்றி மலர்ச்செண்டு

நட்சத்திரம் ஆயிரமிருப்பினும் நிலவே மனங்குளிரச்செய்யும்
நிலவாகு...
தேய்ந்தாலும் வளர்ந்து முழுமதியாகு

வெற்றிக்கான உன்பயணம் வெற்றிக்காண என் வாழ்த்துகள்


உங்களோடு என்றும்,

சீனி.தனஞ்செழியன்


உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

No comments :

உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் ஜஸ்டின் திரவியம் தாக்கல் செய்த மனுவில், 'அதே பகுதியில் உள்ள, ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதை அங்கீகரித்து, அதற்குரிய சம்பளம் மற்றும் இதர நிலுவை பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'இப்பள்ளி நிர்வாகம், மற்றொரு பள்ளி நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். மனுதாரரை புதிதாக நியமித்தது ஏற்புடையதல்ல' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்; உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; அவர்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? என்பதை, தமிழக அரசு மார்ச், 13ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, உத்தரவில் கூறினர்.

மைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய அறிவியல் தினத்தில் அசத்திய அரசு பள்ளி!

No comments :

மைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய அறிவியல் தினத்தில் அசத்திய அரசு பள்ளி!இந்தியாவின் அறிவியல் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 -ம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அறிவியல் துறையில் இந்தியாவுக்குப் பெருமை ஈட்டித்தந்தவர்களுக்கு மரியாதை செலுத்துதல், அறிவியலில் புதிய சாதனைகள் படைத்திடும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அறிவியல் தினத்தை ஆம்பூர் அரசுப் பள்ளி அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனுக்கு புதிய விதத்தில் மரியாதை செலுத்தியுள்ளது.

ஆம்பூர், பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோ.சத்தியகுமார் தலைமையில் கொண்டாடப்பட்ட அறிவியல் தின விழாவில், பள்ளி மாணவர்களில் ஒரு பகுதியினர், இந்தியாவுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த சர்.சி.வி.ராமனின் முகமூடி அணிந்து, அவரைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அறிவியல் சோதனை, பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளி மைதானத்தில், மாணவர்கள் `ராமன்' எனும் பெயர் வரும் விதமாக நின்றனர். அவர்களின் பின், சர்.சி.வி.ராமன் முகமூடியை அணிந்திருந்த மாணவர்கள் நின்றுகொண்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில், இந்தியாவுக்குப் புகழைத் தந்து மட்டுமல்லாமல், அறிவியல் துறையில் அசாத்தியத்தை நிகழ்த்தியமைக்காக, `தேங்க் யூ ராமன்' என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கூற, அந்தப் பெயர் பள்ளியைத் தாண்டி வெகுதூரம் கேட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.  

அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை

No comments :

அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை

அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம்  அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனி அரசு வேலைக்கு யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மருத்துக் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு யாரும் பணம் அளிக்கக் கூடாது. அவ்வாறு யாராவது முயன்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபப்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்துறையின் முக்கிய செய்திக் குறிப்பு:

No comments :

DGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்துறையின் முக்கிய செய்திக் குறிப்பு:

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - இடைநிலை / மேல்நிலை / முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு,  மார்ச் 2019 - தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த இயக்குநரின் செய்திக் குறிப்பு:10,11,12th Std - March 2019 public Exam Time Table - Single Page

No comments :

10,11,12th Std - March 2019 public Exam Time Table - Single Page


அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

No comments :

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி8, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அப்போது, இங்கு போதிய கட்டமைப்பு இல்லை என்று சிலர் வேறு மாநிலங்களில் தேர்வு எழுதவைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத முடியும். இது குறித்து மத்திய நீட் மையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவ, மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றித் தேர்வுகளை எழுதலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தற்போது 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே 5 ஆயிரம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து 25 நாள்கள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுத் தேர்வுகளுக்குப் பிறகே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பல முடிவுகளை அரசு மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15.80 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். விரைவில் அது கிடைக்கும்.
 தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கலாம் என்றார்.

February 28: National Science Day (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்):

No comments :

February 28: National Science Day (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்):


திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர்,  சர் சி.வி.ராமன். படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு 'உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...

வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.  மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில்  வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!

மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!

''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை  வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.

துணிவு கொள்!

ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே  தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!

''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பொது தேர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

No comments :

பொது தேர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

பொது தேர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாணவர்களை சி.பி.எஸ்.இ. எச்சரித்துள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாள் விதி
முறைகள் குறித்து பல்வேறு தகவல்கள் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வுகள் பிப். 15 முதல் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்க உள்ளன. எனவே மாணவர்கள் முன்கூட்டியே சென்று தங்கள் தேர்வு மைய இடங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையங்களுக்கு காலை 9:45 மணிக்குள் சென்று விட வேண்டும்.

போக்குவரத்து பிரச்னைகளை மனதில் வைத்து மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். காலை 10:00 மணிக்கு பின் எந்த மாணவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பள்ளி மாணவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும். தனி தேர்வர்கள் மெல்லிய ஆடை அணிந்து வர வேண்டும்.  மொபைல்போன் உள்பட எந்த மின்னணு சாதனங்களும் எடுத்து வரக்கூடாது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

பொது தேர்வு தொடர்பாக பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளை பரப்புகின்றனர்.  மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Special Tips for 10th Students - Mathematics

No comments :

Special Tips for 10th Students - Mathematics


கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? ( Special article)

No comments :

கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? ( Special article)

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.

இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது; அதற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்

மற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வணக்கம்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

வனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு

No comments :

வனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு முடிவுகள், வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில், 726 வனக்காப்பாளர், 152 ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுகள், டிச., 10,11ல், நடந்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை, ஜன., 28ல் நடந்தது.இறுதிகட்ட தேர்வுகள், பிப்., 25, 26ல் நடந்தது. இதன் வாயிலாக, வனக்காப்பாளர் பணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட, 726 பேரின் பதிவு எண்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

இதே போல, ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கு தேர்வான, 59 பேரின் பதிவு எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை

No comments :

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவூட்டும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடைபெறும் என மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஏனைய பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்று விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளது.

எனவே, தேர்வு நேர மாற்றத்தை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் இறைவணக்க கூட்டத்தில் அறிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் அவர்களது பள்ளியில் உள்ள தகவல் பலகையில், மாணவர்கள் பார்வையில் படும் வண்ணம் ஒட்டிவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்விற்காக.. மாணவர்களுக்கு சில டிப்ஸ்

No comments :

பொது தேர்விற்காக.. மாணவர்களுக்கு சில டிப்ஸ்1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.

4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் எடுங்கள். இறுதி நேர திருப்புதலில் உதவும். ஒவ்வொரு வினாவிலும் - நினைவு கூர்தலுக்காக முக்கிய கருத்துளை points ஆக மனதில் கொள்ளுங்கள்.

5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் நீர் பருக வேண்டும்.

6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.

7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.

8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.

11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.

14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .

15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது  ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.

15. Creative வினாக்காளை பாடத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து தீர்வு கண்டு - விடையளிக்கவும்.

16. வெயில் வெப்பம் அதிகம் இருப்பதால் சரியான அளவு நீர் கொண்ட இயற்கை உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.

17. தேர்விற்கு முந்தைய நாள் தயாரிப்புகளில் - ஏற்கனவே பலமுறை படித்ததன் காரணமாக ஏற்படும் சலிப்பினை தவிர்க்க மனதை ஒருநிலைபடுத்தி மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளுங்கள்.

18. படிப்பதன் இடைவெளிகளில் இயற்கை சூழலை ரசிக்க நடை பயணம் மேற்கொள்ளுங்கள். TV பார்ப்பது படித்ததை மறக்க செய்யும். மாறாக நல்ல இசை கேட்கலாம்.

19. நம்மை நாம் வெளிபடுத்த _ நமக்கு கிடைத்த வாய்ப்பு என எண்ணி படியுங்கள்.

20. இறுதியாக தன்னம்பிக்கை - இது ஒன்று மட்டும் போதும். எதிர்வரும் தேர்வில் எண்ணிய இலக்கை எட்டலாம்.

முயற்சியும் - பயிற்சியும் வெற்றியின் வழிகாட்டிகள்.

வாகை சூட வாழ்த்துகளுடன் கனவு பள்ளி பிரதீப்

Jactto-Geo : மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

No comments :

Jactto-Geo : மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மதுரையில் நடைபெற்ற  ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8ம் ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. அரசு ஊழியர்/பணியாளர்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்ககளை ரத்து செய்ய வேண்டும்.  

2. ஜாக்டோ_ஜியோ-வை  நிர்வாகிகளை அழைத்து பேச  வேண்டும்.                       

3. புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.                          

போராட்டத்தை சக்தியாக நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்.
ஜாக்டோ-ஜியோ.

தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

No comments :

தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டிதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.414 கோடி செலவாகும்’ என்றும், தேர்தல் பணியில் கிராம அலுவலர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்ய பிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 26-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரூ.414 கோடி செலவாகும் என்றும் அதை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி, சாய்தளம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

தேர்தலை முன்னிட்டு அரசு துறைகளில் உள்ள, அதிகாரிகள், அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காவல்துறையில் பணியிடமாற்ற நடவடிக்கைகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை மாற்றப்பட்டுள்ளனர்.

வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்வதில் சில விளக்கங்களை கேட்டிருந்தனர். அதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே பணியிடமாற்ற நடவடிக்கைகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும். தேர்தலின்போது போலீசாருடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ். படையில் உள்ளவர்களையும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கான டெண்டர்களை வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களை தொடங்க வேண்டுமானால் இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியைப் பெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். தேர்தலின் போது வாக்குச்சாவடிகளின் தயார் நிலை பற்றி அதில் ஆலோசிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்துள்ளோம். அந்தப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அளித்துள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தப் பட்டியலில் மாற்றங்கள் இருக்கும். இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவம், சி.ஆர்.பி.எப். படைகளை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உடல்நலக்குறை ஏற்பட்டால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதிபெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்

ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதை தேர்தலுடன் தொடர்புபடுத்தி நான் கருத்து கூற முடியாது.

இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழகத்துக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 27 February 2019

School Morning Prayer Activities - 28th February 2019

No comments :

School Morning Prayer Activities - 28th February 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 28th February 2019

திருக்குறள் : 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உரை:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பழமொழி:

Laugh away your fears

இடுக் கண் வருங்கால் நகுக

பொன்மொழி:

நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.

- தாமஸ் புல்லர்

இரண்டொழுக்க பண்பாடு :

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.

2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.

பொது அறிவு :

1) மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?

 சூல்.

2) பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ?

எறும்பு

நீதிக்கதை :

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1) அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

2) தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

3) திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4) ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மீண்டும் தாக்குதல்

5) சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுப் போட்டி : இந்தியாவின் மனு பேகர், சௌராப் சவுதாரி தங்கப்பதக்கம்

தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு - பதறினால் மார்க் சிதறும்!

No comments :

தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு - பதறினால் மார்க் சிதறும்!

இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கி விடும். மாணவர்கள், பயம், பதட்டம் இல்லாமல், ஆரோக்கியமான மனநிலையோடு தேர்வை எதிர்கொண்டால், மதிப்பெண்களை அள்ளலாம் என, கல்வியாளர்கள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை 348 பள்ளிகளில் இருந்து 35 ஆயிரத்து 723 மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். 116 மையங்களில் தேர்வு நடக்கிறது.20 மாணவர்களுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் என, தேர்வு பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. ஏற்கனவே இரு பொதுத்தேர்வுகளை எதிர்கொண்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, இத்தேர்வு நடைமுறைகள் புதிதல்ல.இருப்பினும், பயம், பதட்டம் இன்றி, தேர்வு எழுதும் மனநிலையை தற்போது உருவாக்கி கொள்வது அவசியம். இது மதிப்பெண்களை அள்ள உதவும்என்கின்றனர் கல்வியாளர்கள்.அவர்கள் கூறியதாவது:தேர்வுக்கு இன்னும் இரு நாட்களே அவகாசம் இருப்பதால், இரவில் நீண்டநேரம் கண்விழித்து படிப்பது, ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
அதிகாலை விழிப்பும், சிறிது நேர யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு பின், படிக்க துவங்குவதும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். முழு பாடத்திட்டத்தையும் படித்தாலும், கேட்கப்பட்ட வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்கமுடியும். வினா எண், பகுதி எண் மற்றும் அடித்தல்திருத்தல் இல்லாமல், உரிய விடையளித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். பல பக்கங்களுக்கு, வினாவுக்கு தொடர்பில்லாத விடை எழுதியிருந்தால், ஒரு மதிப்பெண் கூட கிடைக்க வாய்ப்பில்லை.நேர மேலாண்மையே அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க உதவும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நடப்பு பொதுத்தேர்வு சமயத்தில், உடல்நலக்குறைவு, விபத்து காரணங்களால் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தாலும், எந்த சலுகையும் அளிக்க முடியாது என தேர்வுத்துறை திட்டவட்டமாகதெரிவித்துள்ளது. எனவே, குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அனுப்பாமல் இருப்பது நல்லது.வெப்பநோய்கள் தாக்காமல் இருக்க, தண்ணீர், இளநீர், பழங்கள், காய்கறிகள், கீரைகள் கொண்ட உணவு உட்கொள்ளலாம். உறவினர், அக்கம்பக்கத்தினரின் ஆலோசனைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், வீட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி தருவது, பெற்றோரின் தலையாய கடமை என்கின்றனர்கல்வியாளர்கள்.
நேர்மறை சிந்தனை முக்கியம்அரசு உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில், ''இத்தேர்வு மட்டுமே இறுதி வாய்ப்பாக கருதி, தேவையில்லாத படபடப்பை உருவாக்கி கொள்ள வேண்டாம். இதனால் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடலாம். ஒரு தேர்வு முடித்தபின், விடைகளை தேடுவதை விட, அடுத்த தேர்வுக்கு தயாராகலாம். தோல்வியே அடைந்தாலும், மறு வாய்ப்பு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர் நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

CTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு [ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019 ]

No comments :

CTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு [ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019 ]சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019

தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 08.03.2019, மதியம் 03.30 மணி

தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2019

தேர்வுக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.700
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.1200

எஸ்.சி / எஸ்.டி / PwBD -க்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.350
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.600

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இ-சல்லான் பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.

தேர்வு நடைபெறும் விதம்:

தாள் -1க்கான தேர்வு (1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு ) காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், தாள்-2க்கான (6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு) மதியம் 02.00 மணி - மாலை 04.30 மணி வரையும் நடத்தப்படும்.

கல்வித்தகுதி:

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர்ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்த தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.

இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.

பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர், சிடெட் -இன் www.ctet.nic.in - என்ற இணையதளத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, (https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=147&iii=Y) - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர்வு சார்பான விவரங்கள் - முதன்மைக்கண்காணிப்பாளர் ஒப்படைக்க வேண்டிய படிவம்

No comments :

மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர்வு சார்பான விவரங்கள் - முதன்மைக்கண்காணிப்பாளர் ஒப்படைக்க வேண்டிய படிவம்

மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர்வு சார்பான விவரங்கள் - முதன்மைக்கண்காணிப்பாளர் ஒப்படைக்க வேண்டிய படிவம்:


பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி துவங்கியது

No comments :

பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி துவங்கியது

பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. வினாத்தாள், 'லீக்' ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 6 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச், 14ல் பொது தேர்வு துவங்க உள்ளது. 


தேர்வில், மாணவர்கள் விடை எழுத வேண்டிய முதன்மை விடை தாள்கள், மாணவர் விபரம் அடங்கிய முகப்பு தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. அரசு தேர்வு துறையில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் வினாத்தாள்கள், அங்கிருந்து, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.  

வினாத்தாள்கள் எந்த வகையிலும், லீக் ஆகாமல் இருக்கும் வகையில், கல்வி அதிகாரிகளும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  அதேபோல, வினாத்தாள் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொது தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

No comments :

பொது தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது

பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது. அதன் விபரம்

* பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

* மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை

* மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன

* தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை

* தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல்

* தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல் போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்சர் செங்கோட்டையன்

No comments :

அனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்சர் செங்கோட்டையன்தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் திருவள்ளூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம், பொன்னேரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது:

தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார்.  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு அவர், அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்.
தமிழகத்திலுள்ள பள்ளியில் பயிலும் 9, 10, 11, 12-ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன.

15 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதற்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதன்கிழமை (பிப். 27) தொடங்கி வைக்க உள்ளார். மேலும், கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வி தொடங்கப்பட உள்ளது. அதன் மூலம் படிக்கும்போதே வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி மற்றும்  இணையதள சேவை செய்து தரப்படும் என்றார் அவர். 


முன்னதாக, பொன்னேரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அட்டைகளை அவர் வழங்கினார்.

தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மாற்றம்!

No comments :

தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மாற்றம்!

மக்களைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான விண்ணப்ப படிவத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது, வேட்பாளராக உள்ள நபரின் வெளிநாட்டு சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது பற்றிய விவரங்கள் என அனைத்தும் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Emis Tnschool Attendance App Tips

No comments :

Emis Tnschool Attendance App Tips

சில பள்ளிகள் அனைத்து வகுப்புகள் பதிவு செய்த பின்னும் பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு  காரணம் வகுப்பு பிரிவுகள் (total section) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான்.

அதனை சரி செய்ய   Google browser இல் Tn SchoolsEMIS page
Open செய்து அதில் school info open செய்யவும்.   அதில் class & section select செய்து தேவையற்ற வகுப்பு பிரிவுகளை நீக்கி விட்டால் போதும்.

Jactto-Geo : ( 08.03.2019 ) நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது!

No comments :

Jactto-Geo :  ( 08.03.2019 ) நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது!

அறிக்கை 26.02.2019

வருகின்ற மார்ச் எட்டாம் தேதி தேதி  ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது

ஜாக்டோ ஜியோ நேற்று உயர்மட்ட குழு முடிவின்படி வருகின்ற 8 3 2019 அன்று  ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்

 ஏனென்று சொன்னால் கடந்த ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பள்ளிகள் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் முடங்கின. அப்போதே செவிசாய்க்காத அரசு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் அரசின்  கவனத்தை ஈர்க்க முடியுமா? என்ற ஐயம் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாது மார்ச் 1 முதல் 12ஆம் வகுப்பு,  11ஆம் வகுப்பு,  10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும்,  தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்து  முழு ஆண்டு தேர்வும் நடைபெற இருப்பதாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணி செய்ய இருப்பதாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

தகவல் :

சா அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலகூட்டமைப்பு

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி ஆன்லைனில் பெறும் நடைமுறை விரைவில் அறிமுகம்

No comments :

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி ஆன்லைனில் பெறும் நடைமுறை விரைவில் அறிமுகம்

தமிழகம் முழுவதும் பிறப்பு,  இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

 அதேபோன்று இணையதளம் வாயிலாக பிறப்புச் சான்றிதழில் பெயர்களைச் சேர்க்கும் புதிய முறையும் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. அரசுத் தரப்பில் வழங்கப்படும் முக்கிய ஆவணங்களையும்,  சான்றிதழ்களையும் பொது மக்கள் எளிதாகப் பெறும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி நேர விரயமின்றி ஆன்லைன் மூலமாக சான்றிதழ்களைப் பெறுவதற்கும், போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்கும் இந்த புதிய நடைமுறை உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாகப் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு தொடர்பான  தரவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில்,  சென்னை உள்ளிட்ட ஒரு சில மாநகராட்சிகளில் மட்டுமே கட்டணம் ஏதும் இல்லாமல் பிறப்பு,  இறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. அதேவேளையில், பிற இடங்களை எடுத்துக் கொண்டால், நேரில் சென்று அதற்காகக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறைதான் உள்ளது.

 இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிறப்பு - இறப்புத் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஓராண்டுக்கு முன்னர் அமலானது. இதற்காக www.crstn.org என்ற முகவரியில் பிரத்யேக இணையதளப் பக்கம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.  அதன் கீழ், மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பதிவாகும் பிறப்பு - இறப்பு தகவல்கள் அனைத்தும் ஓராண்டாக பதிவேற்றம் செய்யப்பட்டன. இருந்தபோதிலும், அந்த இணையதளத்தில் இருந்து பொது மக்கள் எவரும் அச்சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி இதுவரை இல்லாமல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில்தான், சம்பந்தப்பட்ட நபர்கள், அந்தச் சான்றிதழ்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை மூலம் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் குறைக்கப்படும். இதற்காக எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு - இறப்புக்கான சான்றிதழ்கள் மட்டுமே தற்போது இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அதற்கு முந்தைய தரவுகள் அனைத்தும் அடுத்த சில மாதங்களுக்குள் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும்.

வரும் நாள்களில், க்யூஆர் - கோட் எனப்படும் பிரத்யேக குறியீடுடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு

No comments :

பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு

லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டுஎண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும்,தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும்எடுக்கவில்லை.தரவில்லைஇந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், 'டிமிக்கி' கொடுத்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.பதவி உயர்வுகள் நிறுத்தம்பொது தேர்வு மற்றும் பொது தேர்தல் காரணமாக, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.

தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, நாடு முழுவதும், லோக்சபா தேர்தலும் நடக்க உள்ளது.இந்நிலையில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள, பதவி உயர்வுக்கான பட்டியல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பின், பதவி உயர்வு நடவடிக்கைகளை துவக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் கோரிக்கை:

No comments :

அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் கோரிக்கை:அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை  அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிட..

* அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே  ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். .

* சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும்  நடைமுறைபடுத்த வேண்டும்.

* சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை  நடைமுறை படுத்த வேண்டும்.

கணினியும்,ஆய்வகமும்  இல்லாத தமிழக அரசுப்பள்ளிகள்:

* அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன்  கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில்  கல்வியாக வழங்கிட)

* அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.

* கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய  அரசு 2011லிருந்து  இன்று வரை தரம்  உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில்  கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும்.

* பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

* கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

"மத்திய அரசின் நிதி வீண்"

* (NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக கொண்டுவர ஆய்வகம் அமைக்க  2011-2012கல்வியாண்டில் வழங்கப்பட்ட நிதி மாநிலத்தை ஆளும் அரசு இன்று வரை பயனபடுத்தவில்லை

* மத்திய அரசு (ICT)அரசுப்பளளி ஏழை மாணவர்களின் கணினி கல்விக்காக வழங்கப்பட்ட  ரூ900 கோடியை நிதியை மாற்ற மாநிலங்கள் போல் முறையாக பயன்படுத்தி கணினி பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.

* கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்  பயன்பெறுவார்கள்.  


திருமதி ஜமுனாராணி,
மாநிலச் செய்தித் தொடர்பாளர்,
8675959594,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு

No comments :

சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும்  நெட் தேர்வு நடத்தப்படுகிறது.இதில் கலை, அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் அதிகமான படிப்புகளுக்கான  நெட்  தேர்வை இப்போது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.

அதுபோல, வேதி அறிவியல், பூலோகம், சுற்றுச்சூழல், கடல்சார் மற்றும் கோள்கள் சார்ந்த அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல் போன்ற படிப்புகளுக்கான  நெட் தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். நடத்துகிறது.2019 ஆம் ஆண்டுக்கான இந்த சி.எஸ்.ஐ.ஆர்.   நெட் தேர்வு வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.தேர்வுக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப்பிரிவினர் ரூ. 1000  செலுத்த வேண்டும். அதுபோல ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ. 500 என்றளவிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'

No comments :

லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது.இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள்அடங்கியபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல்கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக,மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்,தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம்,தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள்பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.

அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், இருந்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை செயலர் தகவல்!

No comments :

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை செயலர் தகவல்!Tuesday, 26 February 2019

School Morning Prayer Activities - 27th February 2019

No comments :

School Morning Prayer Activities - 27th February 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 27th February 2019

திருக்குறள் : 139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

உரை:

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

பழமொழி:

Lamp at home and a lion at chase

பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி

பொன்மொழி:

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்

இரண்டொழுக்க பண்பாடு :

1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொது அறிவு :

1) சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?

 டெமாஸெக்

2) வட இந்திய இசைக்கு என்ன பெயர் ?

இந்துஸ்தானி சங்கீத்

நீதிக்கதை :

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.”

ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.

“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

“அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி..... பயங்கரவாதிகள் முகாமை குண்டுவீசி தகர்த்தது இந்திய விமானப்படை

2) உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடம்...1, 2-வது இடத்தில் ஸ்பெயின், இத்தாலி

3) ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் கலக்கம்

4) தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

5) இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

Kendra Vidyalaya Tiruvannamalai - Interview For Contract Teachers Recruitment - Notification

No comments :

Kendra Vidyalaya Tiruvannamalai - Interview For Contract Teachers Recruitment - Notification


அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

No comments :

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். +1 மற்றும் +2 முடித்த மாணவர்களுக்கு 15.80 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அவர், மூன்றாயிரம் அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என்றார். 

அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும், ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

No comments :

அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும், ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்புஅங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணைக்கு பின் ... அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் எந்த பாதிப்பு இருக்கக்கூடாது என்றும்.

இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எந்த மாற்றம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி  வழிக் காட்டல் நெறிமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது தீர்ப்பு நமக்கு வெற்றி அல்ல. இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதே
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒருமித்த முடிவு .

ஆகையால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேல் முறையீடு செய்து, இறுதி வெற்றி பெறுவோம்.
 வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும்.

ஆசிரியர்கள் எந்த வித கலக்கமும் அடைய வேண்டாம்.


இவண்
க.மீனாட்சி சுந்தரம் Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை

No comments :

2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை


2019 மார்ச்  பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 6  முதல் 9 ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு மார்ச் மாத  பள்ளி வேலை நாள் அட்டவணை:


01.03.19 - வெள்ளி பிற்பகல் மட்டும்
02.03.19 - சனி
03.03.19 - ஞாயிறு
04.03.19 - திங்கள் முழு வேலை நாள்
05.03.19 - செவ்வாய் பிற்பகல் மட்டும்
06.03.19 - புதன்  பிற்பகல் மட்டும்
07.03.19 - வியாழன்  பிற்பகல் மட்டும்
08.03.19 - வெள்ளி பிற்பகல் மட்டும்
09.03.19 - சனி
10.03.19 - ஞாயிறு
11.03.19 - திங்கள் பிற்பகல் மட்டும்
12.03.19 - செவ்வாய் பிற்பகல் மட்டும்
13.03.19 - புதன் பிற்பகல் மட்டும்
14.03.19 - வியாழன் விடுமுறை
15.03.19 - வெள்ளி பிற்பகல் மட்டும்
16.03.19 - சனி
17.03.19 - ஞாயிறு
18.03.19 - திங்கள் விடுமுறை
19.03.19 - செவ்வாய் பிற்பகல் மட்டும்
20.03.19 - புதன் விடுமுறை
21.03.19 - வியாழன் முழு வேலை நாள்
22.03.19 - விடுமுறை
23.03.19 - சனி
24.03.19 - ஞாயிறு
25.03.19 - திங்கள் பிற்பகல் மட்டும்
26.03.19 - செவ்வாய் முழு வேலை நாள்
27.03.19 - புதன் பிற்பகல் மட்டும்
28.03.19 - வியாழன் முழு வேலை நாள்
29.03.19 - வெள்ளி பிற்பகல் மட்டும்
30.03.19 - சனி
31.03.19 - ஞாயிறு

தயவுசெய்து  சரி பார்த்து கொள்ளவும்.

Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது

No comments :

Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது


Income tax e filing செய்து பணம் திரும்ப பெறுபவர்கள் எந்த Bank கொடுத்தோமோ அந்த Bank ல் தங்களுடைய பேன்கார்டு பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே உங்களுடைய பணம் அந்த வங்கிக்கு வரும் இல்லையென்றால் march முதல் வராது.


தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed உடன் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை

No comments :

தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed உடன் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை

தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed உடன் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை விவரம் :


மாணவர் வாழ்வில் வெற்றிடம் - கட்டுரை

No comments :

மாணவர் வாழ்வில் வெற்றிடம் - கட்டுரை


 இயந்திர வாழ்வில் தனது தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள அலைந்து கொண்டிருக்கும் மனிதன் வாழ்வில் கண்டுகொள்ளப்படாத எதிர்கால கேள்வியை நோக்கிய ஒரு மீள் பார்வை.

ஆயிரம் இளைஞர்களை கொடுங்கள் இந்திய பாரதத்தை வல்லரசாக்குவேன் என்ற விவேகானந்தரின் பொன்மொழிகளையும், இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்ற கனவு நாயகனின் கூற்றுகள் அனைத்தும் சிதைந்து கொண்டிருப்பதை கண்கள் காண மறுப்தை நெஞ்சம் நினைக்கட்டும்.
எண்ணிலடங்கா மாணவர்களின் தற்கொலை முயற்சியும், தேர்வு தோல்வி பயமும். பருவ மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளையும், எதிர்கால வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாத மாணாக்கரின் எழுதபடாத வாசகமாக மாறிப்போனது "தற்கொலை".

இன்றைய கல்வி முறைகள் மாணவர்களின் அறிவுத்திறனை பெருக்கவும், பெற்றோரின் தன்மானத்தை காட்டவும், பள்ளிகளின் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களே தவிர இன்றைய கல்வி முறைகள் மாணவர்களின் வாழ்கை தரத்தை வழிவகுத்து அவர்கள் மனதில் ஊன்றுகோலாக வாழ்க்கை கல்வியையோ அல்லது நன்னெறி கோட்பாடுகளையோ கற்பிக்க இன்றைய சமூகமோ, சூழ்நிலைகளோ மறுக்கின்றன. மாறாக மாணவர்கள் வாழ்வில் போராட்ட குணங்களையும், போட்டி மனப்பான்மையும் உருவாக்குவதன் விளைவே இக்கால இளைஞர்கள் பலரது வாழ்வானது எண்ணிய சில வருடங்களில் முடிவுறுகிறது.

பள்ளி மாணவர்களிடையே வாழ்க்கைக்கு அடிப்படையான கல்வி முறைகளையும் தோல்வி குறித்த ஊக்குவிப்பையும் நடைமுறைப்படுத்த தவறிக்கொண்டிருகிறோம். இதன் விளைவே தமிழகத்தில் பல மாணவர்கள் செய்திதாள்களில் தலையங்கமாகிப் போகின்றனர்.
நாகரிக வளர்ச்சியில் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அந்த அபரிமிதமான வளர்ச்சியே அழிவையும் தேடித்தந்து விடுகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

முந்தைய கல்வி முறைகளையும், இன்றைய கல்வி முறைகளின் அடிப்படையில்  மாணவர்களின் மன நிலையை ஒப்பிட்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில் தற்கொலை என்ற ஒன்று மாணவர் வாழ்வில் இடம் பெறாத ஒன்றாகும்.

வியத்தகு தொழில்நுட்ப வளர்ச்சிதான் இன்றைய இளம் சமூகத்தின் சீர்கேடு. சமூக வலைதலங்கள் யாவும் நாடி நரம்புகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்நாளில் அவை இளைஞர்களின் வளர்ச்சியில் எவ்வித பங்காற்றுகின்றன என்பதை உற்றுப் பார்த்தால் சற்றே ஏமாற்றம் தான்.
பல விதமான சௌகரியங்கள், கால விரையம் போன்ற உபயோகமான அமைப்புகளை கொண்டிருப்பினும் அதன் பலன்கள் சொற்பமே. அழிவை தேடியே இளைய சமூகம் ஓடிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிந்ததே.
பெற்றோர்களின் அன்புப் பரிசாக இடம் பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப பொருட்கள் தான் அவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளின் பதின்ம வயது எதிரி என்பதை நினைவில் வையுங்கள்.

முகப்புத்தகம்(facebook), புலனம்(Whatsapp),வலைதளங்கள், போன்றவை பசியாற்றும் தாய்மார்களாகி விட்டன இன்றைய இளம் தலைமுறைக்கு.
ஓர் செம்மறியாட்டு வாழ்கை வாழக் கற்றுக் கொண்டிருக்கும் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் யாவரும் அவர்தம் திறமைகளை கண்டறிந்து வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முற்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பள்ளிகளும், கல்லூரிகளும், இளம் தலைமுறையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. அவை யாவும் இளம் தலைமுறையை மனதளவிலும், உடலளிவிலும், அவர்களின் திறமைகளையும், திறன்களையும் ஊக்குவித்து எதிர்கால தலைமுறையை உருவாக்க வழிவகுக்க வேண்டும் என்பதே உன்னத நோக்கமாகும்.

செம்மறியாட்டு வாழ்க்கை
வாழாதே மாணவனே
செங்குருதி மண்ணில்
பிறந்தவன் நீ!
தோல்விகள் தொடர்வண்டி
பெட்டிகளாய் உன் முதுகில்
தொலைதூரம் தூக்கிச்செல்ல
ஆசைப்பட்டு விடாதே!
வையகம் யாவும் ஆளும்
தகுதி உன் எல்லை
வயல் வரப்புகளோடு வடிகட்டி
அணை கட்டிடாதே!
சாதிய சமூக சேற்றுக்குள்
களையெடுக்க கால் ஊன்று
சீர்கேடுகளை சிக்கெடுக்க
சிறகுகள் முளைக்கப் பெறுவாய்!
பட்டம் பெற்றும் பயனில்லை
பாடப் புத்தகம் போதாது
பகுத்தறிவு பக்ககங்களை
புரட்டிப்பார் புத்துணர்ச்சி கொள்வாய்!
வியர்வை துளிகள் மண்ணில்
விழுந்துவிட்டால் உன் தோள்கள்
வேர்பிடித்து விண்ணைத் தொட
கைகள் நீட்டிட வாடா மன்னவனே!
                           

ரா.அன்பரசு.M.A.,B.Ed., ஆங்கில ஆசிரியர்,
கிட்ஸ் பார்க் மெட்ரிக் பள்ளி,
கிணத்துக்கடவு, கோவை. 

பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு!

No comments :

பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு!


அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தலுக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!

No comments :

அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தலுக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!

அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை பட்டியலில் கோர்ட் நம்பர் 8,வரிசை எண் 9-ல் இடம்பெற்றுள்ளது!