முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பில், 981 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் நடக்கிறது. இதை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துகிறது. இந்நிலையில் முதல்கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. மே 25ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.