128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும்.
192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த  காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது.