வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில், வரும், 2022க்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைமானியக் குழு திட்டமிட்டுள்ளது.

தங்களிடம் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பேர், வேலை அல்லது சுய வேலை வாய்ப்பு பெறுவதைஉறுதி செய்யும்படி,உயர் நிலை கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., உத்தரவிடவுள்ளது.புதிய,சீர்திருத்தங்களை,அமல்படுத்த,யு.ஜி.சி.,  தீவிரம்! வேலைவாய்ப்புக்கு,முன்னுரிமை,அளிக்க,முடிவுஆண்டுதோறும், உயர் கல்வி மையங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் போதிய திறமை இன்மை உள்ளிட்ட பல காரணங்களால், வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்த நிலையை மாற்றும் நோக்கில், பல சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், யு.ஜி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:அனைத்து உயர் கல்வி மையங் களிலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக வைத்து, சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி, உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர் களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வகையில், அவர்களை, எல்லா வகையிலும் திறன் பெற்றவர் களாக உருவாக்க, பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.சமூகத்துடனும், தொழில் நிறுவனங்களுடனும், மாணவர்களுக்கு சிறப்பான வகையில் தொடர்பு இருக்க வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்த பட்சம், 50 சதவீதம் பேருக்கு நிறுவனங் களில் வேலைவாய்ப்பு அல்லது சுய வேலைவாய்ப்பு கிடைப்பதை, அந்த மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களில், குறைந்தபட்சம், மூன்றில் இரு பங்கினர், அவர்கள் படிக்கும் போதே, சமூகத்துக்கு பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், கல்வி மையங்கள் செயலாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகளை, உயர் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., பிறப்பிக்கும்.உயர் கல்வி மையங்கள், தலா, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க வேண்டும்; அந்த கல்வி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களில்,குறைந்தபட்சம், 75 சதவீதம் பேருக்கு, தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு, குழுவுடன் சேர்ந்து பணியாற்றுதல், நேரத்தை சிறப்பாக பயன் படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.உயர் கல்வி மையங்களில் தேர்ச்சி பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவரின், கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் சிறப்பு சோதனை களை, அக்கல்வி மையங்கள் நடத்த வேண்டும். அந்த மாணவர், படிப்பை முடித்த பின், அவரது முன்னேற்றத்தை, சம்பந்தப்பட்ட கல்வி மையம் கண்காணித்து உதவ வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறின.தர மதிப்பீடு அவசியம்!தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் கல்வி மையங்கள் அனைத்தும், 2022க்குள், என்.ஏ. ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம், குறைந்தபட்சம், 2.5 தர மதிப்பீட்டு புள்ளிகளையாவது பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க, யு.ஜி.சி., ஆலோசித்து வருகிறது.

அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, அவற்றை, 2022க்குள் அங்கீகாரம் பெற்றவையாக மாற்றவும், யு.ஜி.சி., திட்ட மிட்டு உள்ளது.உயர் கல்வி மையங்களில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் தொடர்பான விஷயங்களை கற்றுத் தரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.