1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.

2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.


3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும்.
இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.

5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்
பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.

6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்.

பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)

PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.

8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள
31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.

10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப்
பெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)

ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.

11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.

12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.

13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது
45 சதம் ஆகும்.

14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!!
குழப்பம் தேவையில்லை!