பிளஸ் 1, 2 கேள்வித்தாள் எப்படி இருக்கும்? இணையத்தில் வெளியிட்டது கல்வித்துறை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 இது  குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான மொழிப்பாடங்கள், பொதுப்பாடங்கள், தொழிற்கல்வி பாடங்கள்( செய்முறை தேர்வு உள்ள பாடங்கள், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்கள்) ஆகிய பாடங்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பு விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது குறித்த தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த கேள்வித்தாள் வடிவமைப்பு தொடர்பான விவரத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் www.dge,tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது