எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள்.

 மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்