Monday, 14 January 2019
" AIIMS " விண்ணப்பிக்க இன்றே கடைசி
" AIIMS " விண்ணப்பிக்க இன்றே கடைசி
மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 'எய்ம்ஸ்' என்ற, உயர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டில்லி, ஜோத்பூர், பாட்னா, நாக்பூர் உட்பட, 15 இடங்களில் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கான மருத்துவக் கல்லுாரிகளில், பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு இல்லாமல், தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, மே, 25, 26ம் தேதிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே, பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது, பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இதில் பங்கேற்கலாம்.
இந்தாண்டு நுழைவு தேர்வு எழுத விரும்புவோர், அடிப்படை விபரங்களை பதிவு செய்ய, நவ., 30 முதல், ஜன., 2 வரை, அவகாசம் தரப்பட்டது.சில காரணங்களால், இந்த பதிவுக்கான அவகாசம், இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment