வனச்சரக அலுவலர் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு!


வனச்சரக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 9.10.2018 முதல் 15.10.2018 வரை நடத்தப்பட்டது.

அதில் மொத்தம் 17,698 தேர்வர்கள் பங்கேற்றனர் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு முன் நடைபெறும் உடல் தகுதி தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 2288 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.