பிளஸ் 2 பொதுத்தேர்வு 102 தேர்வு மையங்கள்


மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை முன்னிட்டு 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 1ல் துவங்கும் தேர்வை மதுரையில் 513 பள்ளிகளை சேர்ந்த 38541 மாணவர் எழுதுகின்றனர். கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு உட்பட சிறப்பு பிரிவில் 152 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 12 வினாத்தாள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்ல கூகுள் மேப் அடிப்படையில் 28 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் வாகனங்கள் மேப்பில் குறிப்பிட்ட பாதையை தவிர வேறு வழியில் செல்ல முடியாது.

ஆலோசனை கூட்டம் : பொது தேர்வுக்கான அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், சி.இ.ஓ.,

சுபாஷினி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுத்தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருப்பது, சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்குவது, மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, இந்திராணி, மாநகராட்சி கல்வி அதிகாரி விஜயா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்
சின்னதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.