அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு


அரசுப் பள்ளி மாணவர் களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. நமதுநாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறைவாகவே உள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த, தமிழக அரசு சார்பில இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாளில் மாலை நேரத்திலும், வார விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பாகவும் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான செய்முறை தேர்வுகள் சமீபத்தில் முடிந்த நிலையில் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றன. இதனால் நீட் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட் டுள்ளன. பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி முடிந்த பின் பயிற்சிகளை மீண்டும் தொடர பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 


இதுதவிர நீட் பயிற்சி வகுப்பு களில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழுநேர பயிற்சி வகுப்புகள் மார்ச் 23-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டைபோல சென்னை உட்பட நகரங்களில் உள்ள 12 தனியார் கல்லுாரி களின் வளாகத்தில் உணவு, தங்கும் வசதிகளுடன் காலை முதல் மாலை வரை இந்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட முடிவாகியுள்ளது. நீட் பயிற்சி அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வெளிமாநில நிபுணர்கள் கொண்டு மே 3-ம் தேதி வரை இந்த பயிற்சி நடத்தப்படும். இவ்வாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.