Wednesday, 13 February 2019
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு?
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து,
அமைச்சரவை கூடி முடிவு செய்யும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: முத்துராமலிங்க தேவர் வரலாற்றை, ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும், அதில், 'முத்துராமலிங்கம்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன்: இது, தவறான செய்தி. அதுபோன்று புத்தகம் வெளியிடப்படவில்லை. அவ்வாறு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிமுன் அன்சாரி: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு வர உள்ளதாக தகவல். அவ்வாறு நடத்தப்பட்டால், கிராம மாணவர்கள் பெரிதும்
பாதிக்கப்படுவர்.
அமைச்சர் செங்கோட்டையன்: இது தொடர்பாக, மாநில அரசே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை.
தி.மு.க., - தங்கம் தென்னரசு: எதிர்காலத்தில், அரசின் முடிவு என்ன?
அமைச்சர் செங்கோட்டையன்: முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆலோசித்து, அமைச்சரவை கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும். இப்போது சொல்ல முடியாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment