5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு இனி எப்போதுமே பொதுத் தேர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தவறான செய்திகள் வருகின்றன.
மாநில அரசு விரும்பினால் பொதுத் தேர்வைக் கொண்டு வரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் கொண்டு வருவதாக இருந்தால் அதற்காக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் மட்டுமல்ல, இனி எப்போதும் 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றார்.
0 Comments