ஜே.இ.இ., நுழைவு தேர்வு மார்ச், 7 வரை அவகாசம்

உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் 
வழங்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ.,பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய 
உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., 
உள்ளிட்டவற்றில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். ஒருங்கிணைந்த நுழைவு தேர்வான, ஜே.இ.இ.,யை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது.இந்த ஆண்டு முதல், இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது. ஜனவரியில் முதல் கட்ட, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது தேர்வு, ஏப்., 7 முதல், 20ம் தேதிக்குள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்ரவரி, 8ல் துவங்கியுள்ளது. இணையதளம்இதுகுறித்து, அனைத்து பள்ளிகளிலும் படிக்கும், 
பிளஸ் 2 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, என்.டி.ஏ., 
அறிவுறுத்தி உள்ளது. மார்ச், 7க்குள் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை முடிக்க வேண்டும் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.