பள்ளி, கல்லூரிகளுக்கு 9 லட்சம் டிஜிட்டல் கரும்பலகைகள் - ஆபரேஷன் டிஜிட்டல் போர்டுபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான ‘ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு’ எனும் திட்டத்தை  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று தொடங்கிவைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கரும்பலகைக்கு பதிலாக டிஜிட்டல் பலகைகளை நிறுவும் இந்தத் திட்டமானது, 9ஆம் வகுப்பில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.   இத்திட்டத்தின் வாயிலாக பள்ளிகளில் 7 லட்சம் மற்றும் கல்லூரிகளில் 2 லட்சம் என சுமார் 9 லட்சம் டிஜிட்டல் கரும்பலகைகள் நிறுவப்படவுள்ளது.
2022ம் ஆண்டுக்குள் சுமார் ஒன்பது லட்சம் வகுப்பறைகளிலும் டிஜிட்டல் கரும்பலகைகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது