பொது தேர்வு: முகப்பு தாள் அனுப்ப உத்தரவு


சென்னை : பொது தேர்வுக்கு, மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு தாள்கள், இன்று முதல் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 6ல் பிளஸ் 1க்கும் பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச், 14ல், 10ம் வகுப்புக்கு பொது தேர்வு துவங்க உள்ளது. இதற்காக தேர்வு மையம் அமைத்தல், தேர்வுக்கான பொருட்களை, தேர்வு மையங்களுக்கு அனுப்புதல், கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்தல் போன்ற, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கான முதன்மை விடை தாள்கள், ஏற்கனவே தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் பதிவு எண் மற்றும் விபரம் அடங்கிய முகப்பு தாள்கள், இன்று, அனைத்து மாவட்ட தேர்வு மையங்கள் உள்ள, பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.வரும், 20ம் தேதிக்குள், முகப்பு தாள்களை அனுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.