அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி நடைபெற்றது

இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.பின்னர் துணை மின் நிலையத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அரசாணை எதுவும் அரசு பிறப்பிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்