சுகாதார துறை பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்புசென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

பொது சுகாதாரத் துறையில், மக்கள் கருத்து கேட்பாளர் பதவிக்கு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவு பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள், 25ம் தேதி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தங்களின் அசல் சான்றிதழ்களுடன் ஆஜராக வேண்டும். பங்கேற்க தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது. விபரங்களை, தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.