Saturday, 23 February 2019

தரம் உயர வேண்டிய பள்ளி கல்வி !

No comments :

தரம் உயர வேண்டிய பள்ளி கல்வி !தமிழகத்தில் அரசு கல்வி திட்டம் இருந்தது. காலப்போக்கில் ஆங்கில மீடியம் என்ற முன்னெடுப்பின் ஆங்கிலிக்கன், மெட்ரிக்குலேஷன், மத்திய அரசு, அனைத்து நாட்டு படத்திட்டம் என பல திட்டங்கள் வந்துள்ளது.

அரசு திட்ட கல்வி மூலமாகவே பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தேசிய தலைவர்கள், வியாபாரிகள் உருவாகி கொண்டு இருக்க இந்த திட்டம் சரியல்ல என ஏன் பல பல திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றது என சிந்தித்தால் உள்ளதை கால மாற்ற சூழலுக்கு தகுந்து பண்படுத்தாது கல்வியை பணம் ஈட்டும் தொழிலாகத்தான் முன் நகத்தி கொண்டு வருகிதையை பார்க்க இயல்கிறது, பல பள்ளிகள் இங்குள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள் வசமாகி விட்டது,

பணக்காரர்கள் ஏழைகள் என மாணவர்களை பிரித்து விட்டனர், தற்போது தமிழகத்தில் ஒரு ஆழமான கருத்தாக்கம் நிலவ விட்டுள்ளனர், ஏழை எளிய கிராம மாணவர்கள் அரசு பள்ளியிலும் பணக்காரர்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர், தனியார் பள்ளியில் விரும்பி பெற்றோர் சேர்ப்பது போன்ற மாயயை வளர்த்து வருகின்றனர்.

இன்று குட்டி குட்டி கிராமங்களை எல்லாம் கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றி அடிப்படை மக்கள் நலத்திடங்களை பறிக்கும் சூழ்ச்சி போன்றது தான் இதுவும். 16 வயது வரை இலவசமாக கொடுக்க வேண்டிய அரசின் பொறுப்பை அரசியல் அமைப்பு சட்டத்த்தின் ஊடாக கேள்வி கேட்கா வண்ணம் பள்ளி படிப்பை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கு தான் இது,

ஒரு மாணவனை தனியார் பள்ளியில் கல்வி பெற வைக்க சராசரி ஆண்டுக்கு 75 ஆயிரம் செலவாகும் . அதே மாணவன் அரசு பள்ளியில் படித்தால் எல்லாம் இலவசமாக பெறும் கல்வி சூழல் உண்டு. அரசு பள்ளியை எண்ணத்தை உயர்த்துவது தனியார் பள்ளிகளை பூட்டுவது இதுவே தரமான கல்விக்கு முதல் வழியாகும். ஒரு மாநிலத்தின் எல்லா மாணவர்களும் தங்கள் பள்ளி படிப்பை ஒரே பாடத்திட்டத்தில் தாய் மொழியில் படிப்பதும் அவசியமாகும். ஆனால் அரசு அதற்கு முதிராது என்று மட்டுமல்ல அரசு அந்த பொறுப்பையும் கையிலெடுக்காது. ஏன் என்றால் இன்று பணம் படைத்தவர்கள், அதிகாரம் அரசியல் அரசு வேலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிப்பது இல்லை. தங்கள் பிள்ளைகள் பொது சமூகத்தில் கலர விரும்புவதும் இல்லை இந்த மேட்டின குடியினர்.

வேறு சில பெற்றோர், அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை விட தயாராக உள்ளனர். ஆனால் போதிய அளவில் வசதியான அரசு பள்ளிகளின் பற்றாக்குறை. அரசு ஆசிரியர்களின் பொறுப்பின்மையான கற்பித்தல் போன்றவை தடுக்குகின்றது. தனியார் பள்ளிகளை பூட்டுவது அரசு கல்வி திட்டத்தை முறைப்படுத்துவது இதுவே தரமான கல்விக்கு வழிவகுக்கும்.

தனியார் பள்ளிகளில் தரமான கல்வி என்பது கூட ஒரு மாயத்தோற்றம் தான். தரம் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் கொள்ளைக்கு அளவே இல்லை. தனியார் பள்ளியை பற்றி பேச வந்தால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அங்கு மாணவர்கள் தரமாக படிக்கின்றனர் என்று நினைப்பது உண்மை அல்ல, ஆங்கிலத்தில் பேச வைக்கின்றனர் ஆனால் அறிவாற்றலில் வளர்ப்பது இல்லை.

9 ஆம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் என்ற பாடதிட்டத்தில் வகுப்பு எடுத்து விட்டு 10 ஆம் வகுப்பில் அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வைக்கின்றனர். பெருவாரியான பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு நடத்தாது 10 ஆம் வகுப்பை இரண்டு வருடம் கற்பித்து தங்கள் ரிசல்டை பெருக்கி கொள்கின்றனர், அதே போல் தான் +1 பாடம் எடுக்காது +2 வகுப்பை இரண்டு முறை கற்பித்து ரிசல்டை பெருக்குகின்றர்.

இந்த பாணியை அரசு பள்ளிகளும் பின் பற்றாது இருக்கவே 11 வகுப்பும் அரசு பொது தேர்வாக்க சட்டம் இட்டுள்ளனர்.. மாணவர்கள் அடிப்படை அற்று படிப்பதால் மேற்படிப்பில் வரும் போது திறன் அற்றவர்களும் படிப்பு மேல் ஆர்வம் அற்றவர்களாகவும் மாறுகின்றனர், பொது தேர்வு எல்லா வகுப்பிலும் வைத்தால் ஆசிரியர்களுக்கு இந்த ஏமாற்று வேலையில் ஈடு பட இயலாது. முதலில் தேர்வை வைத்து விட்டு தேர்வு சதவீதம் வைத்து ஆசிரியர் திறனை பரிசோதிக்கும் சூழலும் எழும். அதனால் முளையிலே இந்த திட்டங்களை எதிர்த்தால் பிரச்சினை இல்லை என நினைக்கின்றனர்,

தனியார் பள்ளியில்; தேர்வில் தேர்வு ஆகாவிடில் மாணவர்களை பள்ளியை விட்டு விரட்டி விடுவார்கள் அல்லது அதே வகுப்பில் தோற்க வைத்து படிக்க வைப்பார்கள். அரசு பள்ளியின் நிலை அதுவல்ல. அந்த மாணவர்கள் எழுதும் பொது தேர்வு என்பது 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தான்.

இதில் என்ன பிரச்சினை என்றால் சின்ன வகுப்புகளில் கவனிக்காதே வரும் மாணவர்கள் 10 வகுப்பு வரும் போது கூட்ட, குறைக்கவோ, எழுதவோ தெரியாது வெளியே வருகின்றனர், ஜெயிப்பது என்பது நூற்றில் 40 மார்க்கு எடுப்பது என்பது தான்.

பல ஆசிரியைகள் பள்ளிக்கு செல்வதே காலை 11 மணி, அரசும் இட மாற்றம் என்ற பெயரில் ஆசிரியர்கள் ஊர் விட்டு ஊர் பயணம் செய்யும் சூழலை உருவாக்கி விடுகின்றனர், வேலை உறுதி என்ற நிலையில் அங்கு ஜாதி, அதிகாரம் என்ற பெயரில் நடக்கும் அரசியலுக்கு குறைவே இல்லை. வருடம் ஒரு முறை போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பள்ளி அடிப்படை வசதியை பெருக்க மாணவர்கள் சார்ந்து ஒரு முறை கூட குரல் எழுப்புவதும் இல்லை.

ஆசிரியர்கள் கற்பித்தலிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அரசு சமச்சீர் கல்வி திட்டத்தில் பல பயிற்சி திட்டத்தை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் கனமான அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களை வேலை வாங்குவதும் பல திட்டங்களை வகுத்து ஆசிரியர்களை கண்காணிப்பது அவசியமாகும்,

தேர்வு விகிதம் கொண்டு ஆசிரியர்களை மதிப்பிடும் சூழல் உருவாகினால் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கும் அழுத்தம் வேறு எந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தற்போது இருப்பது இல்லை. 5 ஆம் வகுப்பிலும் 8 வகுப்பிலும் பொது தேர்வு வைக்கும் போது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆசிரியர்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அதனால் ஆசிரியர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்,

அதிகமான ஊதியம் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பொது சமூகத்தை விட்டு மிகவும் நகந்து சென்று விட்டனர். ஆசிரியர்கள் என்றால் ஏழை எளியவர்கள் என்ற நிலை மாறி தமிழகத்தில் பணக்கார குழுவுடன் இணைந்து விட்டனர். இவர்கள் மாணவர்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கேள்வி கேட்க இயலா வண்ணம் அடிமட்ட ஏழை, கிராம சூழலில் வாழ்பவர்கள் . சூழல்கள் இப்படி இருக்க அரசு மாற்றங்கள் கொண்டு வரும் போது, ஆசிரியர்கள் கற்பித்தலை கேள்விக்கு உள்ளாக்கும் போது ஆசிரியர்கள் முழு மூச்சாக எதிர்க்கின்றனர்.

தனியார் பள்ளியில் மாணவர்கள் தரம் உயரவில்லை என்றால் கட்டணம் செலுத்தும் பெற்றோர் கேள்வி எழுப்புவர். ஆனால் அரசு பள்ளிகளில் நிலை அதுவல்ல. எந்த அரசியல்வாதி பிள்ளையும் அரசு பள்ளியில் படிப்பது இல்லை. அதனால் அரசு பள்ளி ஆசிரியர்களை திருப்தி படுத்த ஓட்டு வாங்க இந்த சூழலை அரசியல் செய்ய எடுத்து கொள்கின்றனர்,

மாதம் 35 துடங்கி 75 ஆயிரம் வரை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள், தங்கள் பணியில் நம்பிக்கை இருந்தால் மாணவர்கள் தரத்தை அரசு பரிசோதிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்? அரசு பள்ளிகளில் இருக்கும் தரமின்மை படிப்பில் மட்டுமல்ல மாணவர்கள் ஆளுமையில் இருக்கும் குறைபாடுகளையும் களைய உதவ வேண்டியது அரசின் பணியாகும்.ஆனால் செலவை சுருக்க வேண்டும் என்ற தேவைக்காக பல அரசு பள்ளிகளை மூட வைத்ததில் அரசு கட்சிகளின் பங்கு பெரிதாக உண்டு. பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்ற கல்வி வியாபாரிகளும்.

ஆசிரியர்கள் வேலையில் மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலையை திமுக கொண்டு வந்த போது ’டெட்’ தேர்வில் பாஸாக வேண்டும் என்று ஜெயலலிதா கொண்டு வந்தார். எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், இந்த எல்லா மாணவர்களும் மேற்படிப்பிற்கு கல்லூரியில் பல்கலைகழங்களுக்கு கீழ் உள்ள கல்லூரிகளில் தான் படிக்கின்றனர். பரம பிராதமான விடையம் கல்வி என்பது வேலை பெறுவதற்க்கோ மதிப்பெண் பெறுவதோ அதன் நோக்கமாக இருப்பது நல்லது அல்ல. முழுமையான ஒரு மனிதனின் வளர்ச்சியாகும். மாணவர்கள் வளருகின்றனரா அல்லது படிப்பில் தேங்குகின்றனரா என்பதை மிகவும் எளிய அளவு கோலான தேர்வு என்ற அளவீட்டால் தான் எளிய வழியில் அளக்க இயலும். 100க்கு 40 மார்க்கு வாங்க இயலாத மாணவர்களோ அதற்கு உதவ இயலாத ஆசிரியரோ கல்வி கூடத்தில் இருந்து என்ன பயண். ஆசிரியர் பணி என்பது ஊதியத்தையும் வேலை என்பதையும் மீறி நல்ல வளமையான மனிதர்களை உருவாக்கும் பட்டறையாகும். தேர்வு என்பது மாணவர்கள் நேரடியாக அளக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வத்தையையும், திறமையும் அளக்கும் அளவு கோலாகும்.

அரசின் பல நல்ல கல்வி நலத்திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே சேருகின்றது. சமூக நலன் வரும்கால தலைமுறை நலம் என முன்னெடுக்கும் போது அரசியல் லாபத்தை தவித்து சமூக முன்னேற்றத்தை மட்டுமே முன் நிறுத்தி சிந்திப்பது அவசியமாகும்.

சில நுட்பமான தரவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு விழுக்காடு 90% எட்டினாலும் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக குறைந்து 49% என்ற நிலைக்கு குறைந்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் தேசிய சாதனை கணக்கெடுப்புக்கான தேர்வு 7216 பள்ளிகளைச் சேர்ந்த 2,77,416 மாணவர்களிடம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 353 பள்ளிகளைச் சேர்ந்த 15,121 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் மாநில மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், எல்லாப் பாடங்களிலும் கடைசி 5 இடங்களைத் தான் தமிழகத்தால் பிடிக்க முடிந்துள்ள

உத்தரபிரதேச மாநில தேர்வு முடிவுகளை பார்க்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது.உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அம்மாநில தேர்வு முடிவுகள் கடந்த.ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகின. இதில், பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 52 பள்ளிகளும் ஒரு விழுக்காடு தேர்ச்சி வீதத்தைக் கூடப் பெறவில்லை.

J.P Josephine Baba

No comments :

Post a Comment