Tuesday, 19 February 2019
சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!
சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!
அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்து மாணவர்கள் அசத்தினர். பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கண்காட்சி நிறைவுபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உதவித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, பொறுப்பாசிரியர்கள் சுமதி, ரமணிபாய் முன்னிலை வகித்தனர்.
இதில் அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு ரசித்தனர். கண்காட்சியில் 8ம் வகுப்பு மாணவர்கள் ஜித்தேஷ், கபிலன், செந்தில்நாதன் ஆகியோர் சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தும், செல்போன்களுக்கு சார்ஜ் செய்து காட்டி அசத்தினர். முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment