பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்துக்கு, செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சி வகுப்புகள், தனி தேர்வர்களுக்கு ஏற்கனவே, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.
எந்தப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்ததோ, அந்த பள்ளியிலேயே செய்முறை தேர்வும் நடத்தப்படும். வரும், 26 முதல், 28ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடக்கும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களுக்குரிய பள்ளிகளை அணுகி, தலைமைஆசிரியரிடம், செய்முறை தேர்வு குறித்த தகவலை பெற்று பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments