TNPSC - 'குரூப் - 2' தேர்வு : 14 ஆயிரம் பேர் பங்கேற்பு!
'குரூப் - 2' முதன்மை தேர்வை, 14 ஆயிரம் பேர் எழுதினர்.அரசு துறைகளில், குரூப் - 2 பிரிவில் அடங்கிய, தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலைவாய்ப்பு துறை இளநிலை அதிகாரி உட்பட, 23 வகையான பதவிகளில், 1,199 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2018ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது.இதற்கான முதல்நிலை தேர்வு, கடந்த நவம்பரில் நடந்தது; 6.35 லட்சம்பேர் பங்கேற்றனர். அவர்களில், 15 ஆயிரத்து, 200 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, நேற்று முன் தினம் முதன்மை தேர்வு நடந்தது.
இந்த தேர்வில், வினா - விடை தாளில் மாற்றம் அமலானது.ஒவ்வொரு தேர்வருக்கும், வினாத்தாளும், விடை எழுத வேண்டிய தாளும் இணைத்தே வழங்கப்பட்டது. வினாவுக்கு கீழே, விடை எழுதுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் மட்டுமே, தேர்வர்கள் விடை எழுத வேண்டும் என,டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டது. இந்த தேர்விற்கு தகுதி பெற்ற, 15 ஆயிரத்து, 200 பேரில், 14 ஆயிரம் பேர்மட்டுமே பங்கேற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
0 Comments