பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை துவங்க உள்ளது. இதில், 8.16 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்

பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை துவங்க உள்ளது. இதில், 8.16 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.  தமிழக பள்ளி கல்வியில், 2017 - 18ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொது தேர்வு நாளை துவங்க உள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 7,272 பள்ளிகளில் படிக்கும், 4.50 லட்சம் மாணவியர் உட்பட 8.16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 

இந்த தேர்வுக்காக, மாநிலம் முழுவதும், 2,912 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  கடந்த ஆண்டு தேர்வில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களில் 28 ஆயிரம் பேர் பிளஸ் 2 படிப்பில் தொடரவில்லை. பெரும்பாலானோர் பள்ளி நிர்வாகத்தால் கட்டாயமாக மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. விதிகளின்படி, பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2வில், பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம். மேலும் 2018ல் நடந்த பிளஸ் 1 பொது தேர்வில் வினா தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.