10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுஇருக்கிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தபடத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருக்கிறார். பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில்ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், எல்.கே.ஜி படத்தின் வெற்றிவிழா இன்று தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ஹயாட் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கஜா புயலால் பாதித்த கிராமங்களில் 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து உள்ளதாக கூறினார்.