ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல். கே.ஜி. சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments