பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன

மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின. ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய நாட்கள் இடைவெளி விட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இரண்டு வாரமாக நடந்து வரும் பிளஸ் 2 தேர்வுகள், நாளை நிறைவு பெறுகின்றன. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுன்டன்சி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும், மார்ச், 15ல், தேர்வுகள் முடிந்து விட்டன.