ஆசிரியர்களுக்கு 24ம் தேதி முதல், இரண்டு கட்ட தேர்தல் பயிற்சி!

தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. தேர்தல்பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, வரும், 24ம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள், தயாராக இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.