கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட பத்து சிறுமியருக்கு தலா ரூ.5000 செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கு வழங்கிய சிங்கைவாழ் சிறுவன்!கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் சிறுமிகளின் அவலநிலையினை, அங்கு பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி.கணேசன் தம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததைக் கண்டு மனம் வருந்திய சிங்கப்பூரில் வாழும் இயலரசன் அவர்களின் அன்புமகன் தமிழினியன் என்பார் நாடு கடந்து வந்து நேரில் பள்ளிக்கு வருகைபுரிந்து தாய், தந்தை இழந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5000/= வழங்கி, அத்தொகையை ஆசிரியர் மணி.கணேசனின் வழிகாட்டலின் பேரில் அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்து வழங்கியதை நன்றியுடன் பெற்றோர் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் மனிதாபிமான உதவியை ஆசிரியர்களும் ஊர்மக்களும் மனதார பாராட்டி மகிழ்ந்தனர்.