60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வளர்ச்சிபணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. பட்டய பயிற்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மடிகணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.