சான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறைபத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒவ்வொரு ஆண்டும்10ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல் தனியாகவும் கல்வி சான்றிதழை தனியாகவும் வழங்கும். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு முடிவு கட்டும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலையும் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழையும் இணைத்து ஒன்றாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.