டிப்ளமா நர்சிங் படிப்பை டிகிரியாக மாற்ற திட்டம்

தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் இருந்த, 384 இடங்களுக்கான முதுநிலை டிப்ளமா படிப்புகளை, பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனால், 2019 - 20க்கான கல்வியாண்டில், 1,758 எம்.டி., - எம்.எஸ்., என்ற, பட்ட மேற்படிப்பு இடங் களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன.

இதேபோல, டிப்ளமா நர்சிங் படிப்புகளையும், டிகிரி படிப்புகளாக மாற்ற, இந்திய நர்சிங் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.வரும், 2020 - 21ம் கல்வியாண்டிற்குள், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,டிப்ளமா நர்சிங் இடங்கள், டிகிரி நர்சிங் படிப்புகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளில், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.