விரைவான ரயில் பயணச் சேவையை அளிப்பதற்காகச் சதாப்தி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், சில குறிப்பிட்ட மார்க்கங்களில் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டணத்தைக் குறைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதிவேக ரயில் சேவையாக சதாப்தி ரயில்கள் தற்போது 45 மார்க்கங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதற்கு, அதிகப்படியான கட்டணம் தான் காரணம் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள.

டெல்லி to ஆஜ்மிர், சென்னை to மைசூர் இடையேயான இரண்டு சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டது. இதன்பிறகு, அந்த மார்க்கத்தில் பயணிகள் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ரயில்வேக்கு 17 சதவிகிதம் வருவாயும் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தை 25 சதாப்தி ரயில்களிலும் நடைமுறைப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை - மைசூரு சதாப்தி ரயிலில் பெங்களுரு முதல் மைசூரு இடையேயான மார்க்கத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.

இதையடுத்து, சதாப்தி ரயில்களிலும் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால், ரயில்வேக்கு வருவாய்க் கிடைத்தது. இதேபோல், வருவாய் குறைவாக உள்ள 25-க்கும் மேற்பட்ட சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைப்பு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.