தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்கு, பயணிகள், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேரிடையாக செல்ல, ரூ.40 கோடி செலவில், தானியங்கி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.