''தனியார் பள்ளிகள், கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூரில், ஏழை, எளியோருக்கு உதவும் வகையில், துவக்கப்பட்டுஉள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில், நடமாடும் மருத்துவ வாகன திட்டம், திருப்பூரில் நேற்றுதுவக்கப்பட்டது.

 டிரஸ்ட் நிறுவனர் குணசேகரன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர்கள், செங்கோட்டையன், ராதாகிருஷ்ணன் ஆகியோர், துவக்கி வைத்தனர்.பின்,

அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கோடை விடுமுறை அளிக்கப்படுவதை போல், தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் எதையும், தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.