புள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு


இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., கொல்கட்டாவில் செயல்படுகிறது. இதற்கு, டில்லி, சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு, அசாமின் தேஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனம், பார்லிமென்ட் சட்டத்தின் படி, தேசிய முக்கியத்துவ அந்தஸ்து பெற்றது.ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், புள்ளியியல் மற்றும் கணித படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், 11க்கும் மேற்பட்ட முதுநிலை டிப்ளமா மற்றும் முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த கல்வி நிறுவன படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவுகள், பிப்., 5ல் துவங்குகின்றன; மார்ச், 12 வரை பதிவு செய்யலாம். மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 12ல் நடக்கும். மேலும் விபரங்களை, www.isine.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.