கல்வியாண்டின் நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களை, கல்வியாண்டு முழுவதும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் 1973ம் ஆண்டு ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தவர் டி.சாந்தி. இவர் 32 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு  பெற்றார் இதையடுத்து தன்னை 2005-06 கல்வியாண்டு முழுவதும், அதாவது 2006ம் ஆண்டு மே 31ம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சாந்தி மனு கொடுத்தார் ஆனால், அவரது பணியில் திருப்தி இல்லை என்ற  காரணம் கூறி, அவரது கோரிக்கையை பள்ளி தாளாளர் நிராகரித்து 2005ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் சாந்தி வழக்கு தொடர்ந்தார்

13 ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரர் 32 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை செய்துள்ளார் பணி தொடர்பாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. அப்படி இருந்தும், அவரது பணியில் திருப்தி இல்லை என்று தவறான காரணம் கூறி பணி நீட்டிப்பு  வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பணி நீட்டிப்பு வழங்க பள்ளியின் கமிட்டி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக எதிர்மனுதாரர் கூறினாலும், அப்படி ஒரு கமிட்டியே பள்ளியில் இல்லை கல்வியாண்டு நடுவில் ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான், அந்த ஆசிரியர் விரும்பும்பட்சத்தில், கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது  பொதுவான நடைமுறையாக உள்ளது ஆனால் அது மனுதாரர் விஷயத்தில் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து பள்ளி தாளாளர் உத்தரவை ரத்து செய்கிறேன்

மனுதாரருக்கு 2005ம் ஆண்டு டிசம்பர் 1ம்தேதி முதல் 2006ம் ஆண்டு  மே 31ம்தேதி வரையிலான ஊதியத்தை 8 வாரத்துக்குள், பள்ளி தாளாளர் வழங்கவேண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது. அவர்களது நலன் கருதி, கல்வியாண்டின் நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களை, கல்வியாண்டு  முடியும் வரை பணியாற்ற பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்