Thursday, 17 January 2019
Inspire Award - மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
Inspire Award - மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
திருப்பூரில் இம்மாதம், 22ம் தேதி 'இன்ஸ்பையர்' விருதுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கிறது.
அறிவியல் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் பொருட்டு, புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல், 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பள்ளி மாணவர் இடையே, இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க 'இன்ஸ்பையர்' விருது திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி பள்ளி வாரியாக, ஒன்றியம் வாரியாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிக்கு, அவர்கள் தேர்வு செய்யப்படுவர். வரும், 22ம் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கவுள்ளது.
மாவட்டத்தின் பல பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 22 படைப்புகள், கண்காட்சியில் இடம் பெற உள்ளன. ஆறு பேரின் படைப்பு, சென்னைக்கு அனுப்பப்படும். அவர்களில் இருவர், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment