தமிழகத்தில் 23, 24ந்தேதி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்! தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 ( சனி மற்றும் ஞாயிறு ) அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் இறுதிப்பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், வரும் 23, 24ந்தேதி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, புகைப்படம் மாற்றம் என அனைத்தையும் சரி செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை அந்தந்த பகுதி வாக்குசாவடியில் நடைபெற உள்ளது.