TN Schools Attendance செயலியல் பயனர் பெயராக உள்ள பள்ளித் தலைமை ஆசிரியரின் அடையாள எண்ணை எவ்வாறு கண்டறிவது?


மேற்கண்ட இணைப்பு மூலம் EMIS இணைய தளத்திற்கு செல்லவும்.

பயனர் பெயர்:  பள்ளியின் 11 இலக்க U-DISE எண்

கடவுச் சொல்: EMIS இணையதளத்தில் பயன் படுத்தும் கடவுச்சொல்

மேற்கண்ட பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்ளே செல்லவும்.

மெனுவில் தோன்றும், Staff detailsClick செய்யவும்.

பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் வரும்.

இதில் தலைமை ஆசிரியரின் பெயரை Click செய்யவும்.

இப்போது தலைமை ஆசிரியரின்  விவரங்கள் திரையில் தோன்றும்.

திரையின் மேலே தலைமை ஆசிரியரின் பெயர் அருகே 17 இலக்க எண் தோன்றும்.

இதில் முதல் இரண்டு எண்களுக்கு பிறகு, 8 (DDMMYYYY)  இலக்கத்தில், தலைமை ஆசிரியரின் பிறந்த தேதி இருக்கும்.

இதைத் தொடர்ந்து 7 இலக்க எண் இருக்கும்.

ஆக மொத்தம் இந்த 17 இலக்க எண் தான், தலைமை ஆசிரியரின் அடையாள குறியீட்டு எண் ஆகும். இந்த 17 இலக்க எண்ணை குறித்துக் கொள்ளவும்.

பிறகு இதே EMIS இணையதள பக்கத்தில், தலைமை ஆசிரியரின் சுய விவரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணை குறித்துக் கொள்ளவும்.

இப்போது EMIS இணைய தளத்தில் Log Out செய்து வெளியே வரவும்.

பிறகு, TN Schools Attendance செயலியில் latest version V 2.1.9 பதிப்பை மேம்படுத்தவும். (UPDATE)

TN Schools Attendance செயலியின் மேல் பக்கம் உள்ள 3 கோடுகளை தொட்டு, பிறகு Settings ஐ தொடவும். இதன் பிறகு Log Out செய்யவும்.

இப்போது User name ல் தலைமை ஆசிரியரின் ID எண்ணையும், கடவுச்சொல்லில் EMIS இணைய தளத்தில், தலைமை ஆசிரியரின் Contact details ல் பதிவு செய்திருந்த கைபேசி எண்ணையும் பதிவு செய்து, உள்ளே செல்லவும்.

முகப்பு பக்கத்தில் உள்ள Teachers ஐகானைத் தொட்டு, ஆசிரியர்களின் வருகை மற்றும் விடுப்பு விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

புதிய V 2.1.9 வெர்ஷனில் தற்போது வரை, Teachers ஐகானில், ஆசிரியர்களின் பெயர் திரையில் காண்பிக்கப்பட வில்லை. விரைவில் ஆசிரியர்களின் பெயர் UPDATE ஆகும் எனத் தெரிகிறது.