பிளஸ் 1க்கு இன்று 'ஹால் டிக்கெட்'
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம். தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட் இல்லாதோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments