சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு


சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 தேர்வு நடத்தக்கூடிய செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய கட்டண விகிதங்கள், நடப்பு செமிஸ்டரில் இருந்து உடனடியாக அமலுக்கு வருவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.