Wednesday, 6 February 2019
Jactto-Geo : போராட்ட அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்!
February 06, 2019
JactoGeo
,
JactoJio
,
Jactto Geo
,
News
,
Students Zone
,
Teachers Zone
No comments
:
Jactto-Geo : போராட்ட அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்!
ஜாக்டோ-ஜியோ அமைச்சரக சந்திப்பு விபரம் :
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும், _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ், திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோரின் கூட்டுத் தலைமையில் (04.02.19) திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி,
ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றைய (05.02.2019) தினம் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களையும், மதிப்புமிகு இயக்குநர்களையும்_ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான _இன்று (06.02.2019) முற்பகல் 11.00 மணிக்கு மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம்_ அவர்களை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்க துணை முதல்வர் அவர்களே நேரம் ஒதுக்கியிருந்தார்.
இன்று 06.02.19 புதன்கிழமை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் துணைமுதல்வர் அவர்களை சந்திப்பதற்காக தலைமைச்செயலகம் வந்தனர், ஆனால் துணை முதல்வர் அவர்கள் இன்று காலை அவசர வேலை காரணமாக மதுரை சென்று விட்டபடியால் _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ உடனான சந்திப்பு நடந்தது.
சந்திப்பில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து _முதலமைச்சர், துணை முதலமைச்சர்_ இருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை திரும்பியதும் விவாதித்து விட்டு அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் என _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ அவர்கள் உறுதியளித்துள்ளார்.
மேலும் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் கல்வித் துறை அமைச்சர் சந்தித்திப்பில், ஆசிரியர்கள் மாறுதல் உத்தரவுகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி கல்வித் துறை செயலாளரிடம் கூறுவதாகவும் கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
எனவே மாறுதல் உத்தரவை அஞ்சல் வழியில் பெற்றாலும் அவர்கள் (முன்பு) பணிபுரிந்த பள்ளியிலிருந்து விடுவிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தகவல்:
TNPTF
ஜாக்டோ-ஜியோ,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment