உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]

திருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உடற்கல்வி இயக்குநர் - 01

சம்பளம்: மாதம் ரூ. 10,000

தகுதி: இளங்கலை பட்டபடிப்புடன்ம் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உடற்கல்வி ஆசிரியர் - 02

சம்பளம்: மாதம் ரூ. 8,000

தகுதி: உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2019