ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்
ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிப் பார்வை என அலுவலகத்தில் எழுதி வைத்து விட்டு ஆசிரியப் பயிற்றுநர்கள் தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி ஆன்லைனில் உள்ள ஆப்பில் தான் பதிவு செய்ய வேண்டும் .
தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.
எனவே இனி பள்ளிப் பார்வை என எழுதி வைத்து விட்டு தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வது பெருமளவு குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
0 Comments