ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 வருகிற ஜூன் மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வை எழுதவுள்ள முதலாம் மற்றும் இரண்டாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 15ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கற்கும் குழந்தை பாடத்திற்கும், 18ம் தேதி ஆங்கிலம் கற்பித்தல்-1ம், 20ம் தேதி கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் -1ம், 22ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல் /இளஞ்சிறார் கல்வி- 1ம், 25ம் தேதி கணிதம் கற்பித்தல் -1ம், 27ம் தேதி அறிவியல் கற்பித்தல் -1ம், 29ம் தேதி சமூக அறிவியல் கற்பித்தல் -1 ஆகிய பாடங்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

இதே போல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி இந்தியக் கல்வி முறை, 17ம் தேதி ஆங்கிலம் கற்பித்தல் -2ம், 19ம் தேதி கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் -2ம், 21ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல் மற்றும் இளஞ்சிறார் கல்வி -2ம், 24ம் தேதி கணிதம் கற்பித்தல் -2ம், 26ம் தேதி அறிவியல் கற்பித்தல் -2ம், 28ம் தேதி சமூக அறிவியல் கற்பித்தல் -2 ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.