கணினி படிப்புக்கு 'ரிசல்ட்' அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள, வணிக கல்வி மையங்கள் மற்றும் கணினி கல்வி பயிற்சிமையங்கள் வழியே, கணினி பயன்பாடு சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.

 இதற்கான தேர்வு டிசம்பரில் நடந்தது.விடை திருத்தம் முடிந்து, தேர்வு முடிவுகளை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், நேற்று வெளியிட்டது. தேர்வர்கள், தங்களின் பயிற்சி நிறுவனங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.