தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு!தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும்தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும்.விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.