ஜாதி சான்றிதழ் ஆங்கிலத்தில் வழங்க மாணவர்கள் கோரிக்கை

உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதியாக, ஆங்கில மொழியில் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி, வருவாய் துறைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் உட்பட, ஒவ்வொரு மாநில மாணவர்களும், வேறு மாநிலங்கள் மற்றும்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர முற்படுகின்றனர். இதற்கு, கல்வி சான்று மட்டுமின்றி, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவையும் அவசியம். தமிழகத்தில், இந்த சான்றிதழ்கள், பொதுவாக தமிழில் வழங்கப்படுகின்றன.

பலஉயர்கல்வி நிறுவனங்கள், ஆங்கில மொழியில் சான்றிதழ்களை கேட்கின்றன.எனவே, பிறப்பு சான்றிதழ் வழங்குவது போல, ஜாதி சான்றிதழ்களையும், ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.